பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

o இந்தியாவிலிருந்து வந்த நாங்கள், அந் நகருக்கு அருகி. லுள்ள, நெருப்பாலயத்தைக் கண்டு போகவேண்டு: மென்று, பரிந்துரைத்தார். மேலும், நேரம் கிடைத்தால், அஜெர்பெய்ஜான் குடியரசின் வரலாற்றுக் கண்

காட்சியைக் காண வேண்டுமென்றும் கருதினர், காட்சிக் காப்பாளர்.

அவருடைய இரு பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வழிவகுத்துக் கொடுத்தார்கள், உள்ளூர் தோழர்கள்.

அந் நகரில் தங்கியிருந்த இரண்டாம் நாள், நெருப் பாலயத்தைக் கண்டோம். முதலில் கண்டது வரலாற்றுக் கண்காட்சியை.

அக் கண்காட்சிக்குள் நுழைந்ததும் சில பெரிய முதுமக்கள் தாழிகளைக் கண்டோம். இறந்தவர்களே அத்தகைய தாழிகளில் இட்டுப் புதைப்பது மிகப் பழங் கால வழக்கம் என்று விளக்கினர், அங்குள்ள வழிகாட்டி. இத் தகவல் நமக்குத் தெரிந்ததே.

அந்தத் தாழிகள் அஜெர்பெய்ஜான் குடியரசில் கண் டெடுக்கப்பட்டவை என்று சுட்டிக்காட்டினர். அதிலிருந்து தெரிவது என்ன?

மக்கள் இனத்தின் மிகப் பழைய குடியிருப்புகள் அஜெர்பெய்ஜானில் இருந்தன என்பது புலனுயிற்று. பழைய கற்காலத்திலேயே, ஆதி மனிதன், அஜெர்பெய் ஜானில் குடியிருந்ததற்கு சான்றுகளே அக்கண்காட்சியில் காணமுடியும். - ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப் பகுதியில்,

வெண்கலக் காலம் தொடங்கிற்ரும்.

இப்போதைய அஜெர்பெய்ஜான் பகுதியில், கிறிஸ்து வுக்கு முன் ஒன்பதாம் நூற்ருண்டிலிருந்து ஏழாம் நூற்.