பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

இயக்குனர் உண்டு. அவர் மியூசியம் காப்பதில் பயிற்சி இபற்றவர். இக் கோயிலின் இயக்குனர் ஓர் பெண்மணி. முப்பது வயதுக்கும் குறைவாக மதிப்பிடக்கூடிய இளமை புடையவர் அந்த அம்மையார். அவர் ஒரு மணி நேரத் திற்குமேல், மிகப் பொறுமையாக, எங்களுக்குக் கோயில் முழுவதையும் காட்டி, விளக்கினர். அந்த உதவி என்றும் நினைவிலிருக்கும்.

பாக்கு நகரில் தங்கியிருந்தபோது ஒர் இரவு, காங்கள் கால்பந்தாட்டப் பந்தயத்தைப் பார்த்தோம். மின் விளக்குகள் பொழியும் செயற்கை ஒளி மழையில் பந்தாடு வேதில் சோவியத் மக்களுக்கு எத்தனே மகிழ்ச்சி! பந்தயம் நடந்த விளையாட்டு அரங்கு பெரியது. அன்று காண வந்தோர், ஏராளம் நாங்கள் ஒர் அரை மணி நேரம் அந்த வேடிக்கையைப் பார்த்துவிட்டு, வெளியேறிைேம்.

சோவியத் மக்களின் கலையார்வத்தை நிறைவு செய்யும் பொருட்டு, நகரங்தோறும் பற்பல கலையரங்குகள் உள்ளன, நாடகத்திற்குத் தனியாக, நாட்டிய நாடகத் திற்கு தனியாக, இசைக் கச்சேரிகளுக்குத் தனியாக என்று அரங்குகளே அமைத்திருக்கிருர்கள்.

மாஸ்கோவில் அத்தகைய கலேயரங்குகள் முப்பத் தைந்து உள்ளன. பாக்கு நகரிலும் நான்கு உண்டு. அவற்றில் ஒன்றில் நடந்து கொண்டிருந்த நாடகத்தைப் பார்க்கச் சென்ருேம்.

அரங்கின் இயக்குனர் எங்களை வரவேற்று உபசரித் தார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதாம் ஆண்டு அதே அரங்கில், அடிமைப்பட்டுள்ள ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் நடந்ததாம். அதற்கு, காலஞ் சென்ற எம். என். ராய் வந்திருந்தார் என்று சொல்லி எங்கள் உள்ளத்தைத் தொட்டார்.