பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

"அத்தனை கோடி பேருக்கும் கற்றுக் கொடுக்க எத்தனை நூருயிரம் ஆசிரியர்கள் தேவை. அத்தன் ஆசிரியர்கள் இல்லை. இருந்த ஆசிரியர்களுக்கும், முதியோர் கல்வியில் பயிற்சி இல்லை. '

' குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சொல்லிக் கொடுத்துப் பழகியவர்களைக் கொண்டு, முதியவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது கடினமே!" என்று, என் பட்டறிவைப் பறக்க விட்டேன்.

' மெய் தான். எல்லாவற்றையும் சீராக அமைத்துக் கொண்டு, நடத்துவதல்ல, முன்னேற்றப் புரட்சி.

" துணிந்து இறங்க வேண்டும் கல்விப் புரட்சியில். நாடு முழுவதிலும் பல நூருயிரவர் குதிக்க வேண்டும் கல்விக் களத்தில். அதற்கேற்ற மனநிலையை உருவாக்கு வதே அடிப்படை வேலே."

அதற்கு என்ன செய்தார்கள்?' என்று கேட்டோம். "ஊர் தோறும் முதியோர் எழுத்தறிவிப்புக் குழு க்களே அமைத்தார்கள். சிற்றுாருக்கு ஒர் குழு : நகரங்களில் பல குழுக்கள். இவற்றையெல்லாம் இணைத்து, ஊக்கி இயக்குவதற்காக, மாவட்டக் குழுக்களே ஏற்பாடு செய்தார்கள். பிரதேசக் குழுக்களும் உருவாகின. நாடு :முழுவதற்குமான ஒரு பெருங்குழுவும் அமைக்கப் பட்டது. அதன் தலைவராக யாரையோ கியமிக்கவில்லை. எங்கள் சோவியத் ஆட்சியின் தலைவராக இருந்த காலின் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

நாட்டின் தலைவரே, எழுத்தறிவு இயக்கத்தின் தலைவராகவும் இருந்து, வழிகாட்டி கடத்தியதால், மக்கள் ஆதரவைப் பெற முடிந்தது." -

' ஆசிரியர்களே எப்படிக் கண்டுபிடித்தீர்கள். அதைச் சொல்லுங்கள் ' என்று வேண்டிளுேம்.