பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அங்காட்டில், நெடுங்காலத்திற்கு முன்பு, பெளத்தப் பள்ளிகள் இருந்தன. இன்றும் பெரிய புத்தர் சிலையும் பிற சின்னங்களும் உள்ளனவாம். நம் பாரதக் கதையில் திருதராஷ்டிரன் மனைவி பெயர் காந்தாரி. அவள் காந்தாரத்தில் பிறந்தவர் என்று கருதப்படுகிறது. இன்றும் காந்தாரா என்று ஓர் ஊர் ஆப்கன் நாட்டில் உள்ளது.

இன்றைய காந்தாரமும் அதை உடைய ஆப்கனும் நம்மோடு எப்படிப்பட்ட உறவு? நமக்கு நட்பு நாடு. ஆப்கனிஸ்தானம் இஸ்லாமிய நாடாயிருந்தும் பாகிஸ்தான் பக்கம் சாயவில்லை. அண்மையில், ஐக்கிய நாடுகளின் அவையில், இந்திய பாகிஸ்தான் போர் பற்றி எழுந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக நடந்து கொள்ள வில்லை. இதை நினைத்தால் மகிழ்ச்சி. அப்போதைக்கப் போது நம்முடைய ஆதரவைப் பெற்ற, எகிப்து நடந்து கொண்ட விதமோ வியப்பானது.

ஆப்கனிஸ்தானின் தலைநகரம் எது ? அது கா பூல். காபூலைச் சுற்றி குன்றுகள். அதைச் சுற்றி பசும் வயல்கள். விடுதோறும் திராட்சைப் பந்தர்களேக் கண்டோம். திராட்சைத் தோட்டங்களும் நிறைய உண்டு.

காபூல் புது நகரமா ? இல்லை. பழைய நகரம். வரலாற்றுக் காலம் முதல் இருந்து வரும் நகரம். இப்போது, புதுப் பொலிவு பெற்று வருகிறது. நவீன நகரமாகி வருகிறது. விமான கிலேயத்திலிருந்து, ஊருக்குள் போகும் போது, ஏதோ மேட்ைடு நகரம் ஒன்றிற்குப் போவது போன்ற உணர்ச்சியே ஏற்படுகிறது. அகன்ற நல்ல சிமெண்ட் சாலைகள், நவீன ஒட்டல்கள், மின்சார சாதனங்கள், தியேட்டர்கள் ஆகியவை பெருகி.

வருகின்றன.