பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

உரிய காலத்தில், முழு நேர மாணவர்களுக்கு கடத்தும் அதே பரீட்சையை, பகுதி நேர மாணவர் களுக்கும் கொடுப்பார்கள். தேறினவர்களுக்கு, சான்றிதழ் களோ பட்டங்களோ கிடைக்கும்.

ஒரே பாட திட்டம். அதை முடிக்க மூன்று வழிகள், ஆயினும் அதில் தேற ஒரே வகையான பரீட்சை. எனவே, மூன்று வழிகளில் எவ்வழியாகப் பட்டம் பெற்ருலும் ஒரே மதிப்பே.

இந்த மூன்று கல்வி வாய்க்கால்களும் நாடு முழுவதும் உள்ளன. சில துறைகளுக்கு மட்டும் பயன்படவில்லை. பல துறைகளுக்கும் பயன்படுகின்றன.

சோவியத் நாட்டுக் கல்வி, பலவகையான பயிற்சி களுக்கு இடம் வைத்துள்ளது. பொதுக்கல்விக்கு மேல், பல கிலேகளில், பல்வேறு தனிப் பயிற்சிக்கு வகை செய் துள்ளது. அத்தகைய தனிப் பயிற்சிகளே 'ஸ்பெஷாலிடிஸ்' என்கிருர்கள். முந்நூற்று இருபது 'ஸ்பெஷாலிடிஸில் பயிற்சி கொடுக்கிருர்கள். அவற்றில் இருநூாற்று அறுபதை, பகுதி நேரப் படிப்பின் மூலமோ, அஞ்சல் மூலமோ தேறமுடியும்,

அஞ்சல் படிப்பு என்ருல், ஆசிரியரோடு நேரடித் தொடர்பே இல்லாத படிப்பு என்று கருதிவிடவேண்டாம். அஞ்சல் படிப்பின் ஒர் கூறு, கல்விக்கூடத்தில் உறையுள் பயிற்சி. அஞ்சல் கல்வி பெறும் மாணவர் ஒவ்வொரு வரும் சம்பந்தப்பட்ட கல்விக்கூடத்திற்கு, அப்போதைக் கப்போது வந்து, தங்கி, ஆசிரியர்களிடம் நேரடிப் பயிற்சி பெறவேண்டும். எத்தனைமுறை வந்து போகவேண்டும், எவ்வளவு காலம் தங்கியிருக்கவேண்டும் என்பவை,