பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

சோவியத் ஆட்சியின் தந்தையாகிய மாமேதை லெனினும், சோவியத் ஆட்சியும் முதியோர் எழுத்தறிவுப் பிற்கு முதலிடம் கொடுத்ததையும் நாடு முழுவதும் அப் பணிக்காக பெரும் இயக்கமொன்றை நடத்தியதையும் கேள்விப்பட்டு மகிழ்ந்த காங்கள், சிறுவர் சிறுமியர் வாலிபர் இவர்களுடைய கல்வி வளர்ச்சி பற்றியும் அறிய விரும்பினுேம். அறிந்து கொண்டோம்.

சோவியத் நாட்டில், எந்தக் கோடியிலும் பள்ளிக் கூடம் இல்லாத குறை இல்லை. பள்ளிக்கூடத்திற்கு வரக் கூடிய குழந்தைகள் பத்து பேரே உள்ள சிற்றுாரிலும்-நெடுங் தொலைவில் உள்ள சிற்றுாரிலும் - தொடக்கப்பள்ளி யுண்டு, அத்தகைய பள்ளி அநேகமாக ஒராசிரியர் பள்ளி யாகவே இருக்கும். அங்கே இரண்டு வகுப்புகள் இருக்க, லாம். *

பள்ளிக்கூடங்களே யார் கடத்துகிருர்கள் ? பள்ளிக் கூடங்கள் பொதுத் துறையில் நடக்கின்றன. தனியார்