பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

பள்ளிகள் இல்லையா ? இல்லை. பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி, தொழிற்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி ஆகிய எதையும் தனியார் கடத்துவதற்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே நன்கொடை சிக்கல் இல்லை. எல்லா கல்விக்கூடங்களும் காட்டின் உடமை.

எந்த கிலே வரை கல்வி இலவசம் ? எந்த கிலேயி லாவது கல்விக்கு கட்டணம் உண்டா ? இக் கேள்விகளைக் கேட்டோம்

எல்லா நிலைக் கல்வியும் இலவசம். எந்த கிலேயிலும் யாரிடமும் - அயல்நாட்டு மாணவர்களிடமும் - கல்விக்கு சம்பளம் வாங்குவதில்லை. கல்லூரிக் கல்வி கூட எல்லோ ருக்கும் இலவசம்.

முதற் பட்டம் வரையிலா ? அதற்கு மேலும் இலவசமா? மேற்பட்டப் படிப்பும் இலவசம் என்று கேள்விப்பட்டோம்.

இலவசக் கல்வி, தரத்தைப் பாதிக்கவில்லையா? இல்லை யென்று தெரிந்து கொண்டோம். காரணம் ?

கல்வி இலவசமாக இருப்பதோடு கல்விக்குப் பொருத்தமான சூழ்நிலை, சோவியத் நாட்டில் உள்ளது. நாடு முழுவதிலும் அத்தகைய சூழ்நிலை உள்ளது. மாண வர்கள், மாணவர்களாகவே இருக்கிருர்கள். ஊர் வம்பு களேயெல்லாம், தங்கள் தலையில் துரக்கிப் போட்டுக் கொண்டு, கல்லூரிகளை விட்டு வெளியேறுவதன் மூலம், படிப்பைப் பாழாக்கிக் கொள்வதில்லை.

இதனை இதல்ை இவன் முடிக்கும் என்ருய்ந்து

அதனை அவன் கண் விடல்

என்ற குறள் அவர்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ ! அக் கொள்கையையே சோவியத் மாணவர் உலகம் பின்