பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

அத்தனை தோழர்களும் விமான கிலேயத்திற்கு எங்களுட்ன் வந்து வழியனுப்பினர்கள், வரவேற்ற போது இருந்த் ஆர்வமும் அன்பும் மதிப்பும் வழியனுப்பும் ே இருக்கக் கண்டோம். விமானம் வரை எங்களே தாளில் அழைத்துச் சென்று வழியனுப்பினர்கள்.

அவர்கள் எங்களேக் கட்டித் தழுவி, மீண்டும் திரும்பி வாருங்கள்' என்று விடை கொடுத்த போது கண்கள் குளமாயின.

இந்தியாவிற்கு வரும்படி நாங்கள் அவர்களே அழைத் தோம்.

மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, மாஸ்கோ வந்தடைந்தோம். பனி மழை பெய்து கொண்டிருந்தது. ஆயினும் காங்கள் கனையாதபடி, பத்திரமாக எங்களே வெளியே கொண்டு வந்தார்கள்.

மாஸ்கோ திரும்பிய பிறகு எங்கள் முதல் நிகழ்ச்சி, அலுமும்பா பல்கலைக்கழகத்தைப் பார்வையிடல்.

நாங்கள் பாக்கு நகரில் இருக்கையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பிற்பகலில் அப் பல் கலைக்கழகத்திற்குச் சென்ருேம்.

முதலில் துணைவேந்தரைப் பேட்டி கண்டோம். அவர்

எல்லோரையும் போல, ஆர்வத்தோடும் அன்போடும் எங்களை வரவேற்ருர். அப் பல்கலைக்கழக வரலாற்றினையும் தொண்டினையும் விளக்கினர்.

o

லுமும்பா பல்கலைக்கழகம் மாஸ்கோ நகரில் அமைக் கப்பட்டுள்ள இரண்டாவது பல்கலைக்கழகம். இதன் வயது பத்து. இதன் தனிக் குறிக்கோள் என்ன தெரியும்ா?,

  • * * அயல்நாட்டு மாணவர்களை ஊக்குவதற்காகவே இப் பல்கலைக்கழகம் உள்ளது. - - ---