பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். இப்படி அதிகப்படி வேலை வாங்குவதால், இப் பல்கலைக்கழகத்தில், மற்ற கழகங்கள் விட விரைவில் படிப்பை முடிக்க முடிகிறது. - 'அடேயப்பா! முப்பத்தாறு மணி நேரப் படிப்பா என்று பாராட்டினேம். மேற்கொண்டு தானே படிக்க வேண்டுமா என்று விசாரித்தோம்.

சாதாரணமாக, ஒவ்வொருவரும் தனியே விடுதிகளில் வாரத்திற்கு பதினெட்டு மணி நேரமாவது படித்தால் மட்டுமே சமாளிக்க முடியுமாம். ஆகவே நம் தம்பி தங்கைகள், லுமும்பா பல்கலைக்கழகத்திற்குச் சென்ருல் வாரத்திற்கு ஐம்பத்து நான்கு மணி நேரத்தை கல்விக்குச் செலவிடுகிருர்கள். அதற்குச் சுணங்கக் கானேம். வேறு வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர் களும் தங்கள் காய் காட்டில் படிப்பதைவிட அதிக கேரம் படிக்கிருர்கள். அதிக அக்கறையோடு படிக்கிருர்கள். தோன்றிய இடத்தில் மட்டும் ஏன் எப்படியோ இருக்கிருர்கள்? எந்தெந்த சாக்கையோ சொல்லி, படிப்பதை விட்டு வெளியே வந்து விடுகிருர்கள்? வெளி நாடுகளிலே ஒரு மனப்பட்டு, ஆழ்ந்து படிக்கக் கூடிய வர்கள். தங்கள் நாட்டில் இருக்கும்போது அக்கறையற்று அலட்சிய புத்தியோடு அலைவானேன்? இந்த ஐயங்கள் எழுந்தன.

சூழ்நிலை மிக முக்கியம். ஆழ்ந்து படிப்பதற்கேற்ற சூழ்நிலை இருந்தால் மட்டுமே, தரமான கல்வியைப் பெறலாம். கல்விக்கு, கடுமையான படிப்புக்கு ஏற்ற குழ்கில அங்கே - சோவியத் நாட்டில் - உருவாக்கப் பட்டிருக்கிறது. கற்கப் போனவர்கள், கற்பதை விட்டு விட்டு வேறு பெரியதனங்களுக்குப் போக விடுவதில்லை. . எங்கோ ஏதோ கடப்பதைக் காட்டி, கெர்தித்து எழுவது போல், கல்லூரி வேலை நிறுத்தம் செய்வது.