பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அதிகாலையில் வேலைக்குப் போவதாகக் கூறினேன் அல்லவா? கூலி வேலைக்காரர்கள் மட்டுமா அப்படி இல்லை. அலுவலகங்களும் கூட, காலே எட்டன்ர அல்லது ஒன்பது மணிக்குள் திறந்து இயங்குகின்றன. -

காபூலில் தங்கியது, சிலமணி நேரமே ஆயினும் இந்தியத் தூதரகத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டிற்று காலை ஒன்பது மணிக்கு நாங்கள் சென்ருேம். அலுவல கத்தில் வேலே நடந்து கொண்டிருந்தது. எங்களுக்கு எவ்வளவு பூரிப்பு தெரியுமா? நாமும் காலேயில் அலுவலகங் களைத் திறந்தால் என்ன? படிப்பிற்கு ஏற்ற நேரமாகிய காலப் பொழுதில் கல்விக் கூடங்களைத் திறந்தால் என்ன? இவ்வெண்ணங்கள் எழுந்தன.

ஆப்கனிஸ்தானத்தோடு, வாணிக ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக இந்தியத் தூதுக்குழுவொன்றை, நம் அரசு, அப்போது, காபூலுக்கு அனுப்பியிருந்தது. அவ் வொப்பந்தத்தின் விளைவாக, மாதுளையும், பாதாமும், பிஸ்தாவும், உலர்ந்த திராட்சையும் தாராளமாக நமக்குக் கிடைத்தால் நன்ருக இருக்குமல்லவா? பழமும் பருப்பும் எல்லோருக்கும் எட்டுவது நல்லதல்லவா?

காபூலில், நாங்கள் பெருமைப்படுவதற்கான ஒன்றைக் கண்டோம். அது, உங்களுக்கும் பெருமை கொடுக்கக் கூடியதே! இதோ சொல்லி விடுகிறேன்.

இந்தியா, ஆப்கனிஸ்தானத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. ஆமாம் அந்நாட்டின் நலத்திற்கு உதவுகிறது இந்தியா. இந்தியா, வாங்கிக் கொள்ளும் நாடு; கொடுக்கும் நாடல்ல என்று நினைத்திருந்தால் தவறு. நாமும் சில நாடுகளுக்கு உதவி செய்கிருேம். ஆப்கனிஸ் தானத்திற்கு என்ன உதவி செய்கிருேம்?

மருத்துவ கிலேயமொன்றைக் கட்டிக் கொடுத்து உதவும் பணியில் ஈடுபட்டிருக்கிருேம். கான்ட்ராக்டர்