பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

ருேம். அவரவர் இருக்கையில் அமர்ந்து, கச்சையைக் கட்டிக் கொள்ளுங்கள். புகை பிடிக்காதீர்கள்' என்i குறிப்பைப் பின்பற்றுங்கள். வானவூர்தி, கிற்கும் வை

எழுந்திருக்காதீர்கள்." பணிப் பெண் அப்படி ததும், புதிய, நல்ல, சமுதாயத்தை விரைந்து உருவாக்கு, வதில், அறிவாளிகளின் பங்கைப் பற்றிய சிந்தனையைத் தேக்கி விட்டு, கட்டளைப்படி கச்சைகளைக் கட்டிே கொண்டு, காத்துக் கொண்டிருந்தேன். என்றைக்குமே புகை பிடிக்காதவன். ஆகவே சிகரெட்டை அனேக்கும். தேவை ஏற்படவில்லை.

டாஷ்கண்ட் விமான நிலையத்தில் இறங்கப் o

விமானம் கீழே இறங்கி, ஒடு பாதையில் ஊர்ந்து, கடைசியாக கின்றது. பயணிகள், இறங்குவதற்கு அறிவிப்புக் கிடைத்தது. வரிசையாக இறங்கி விமான கிலேயத்திற்குச் சென்ருேம்.

டாஷ்கண்டில், சிறு தூறல், குளிர் காற்று சீறிற்று வெளியில் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இல்லை. ஆகவே, துன்பப்படாமல் விமான நிலையத்திற்குள் புகுந் தோம்.

முதலில் உடல்நலச் சான்றுகளைச் சோதிக்கும் கூடத் திற்குச் சென்ருேம். நீண்ட வரிசையில் கின்ருேம். இரு பெண்கள், சான்றுகளைச் சோதிக்கும் பணியில் ஈடு பட்டனர். பதினைந்து இருபது கிமிடங்கள் கின்ற பிறகு எங்கள் சான்றுகளின் சோதனை முடிந்தது.

அடுத்தது சுங்கச் சோதனே. அது, பிற நாடுகளில் இருப்பது போல் கண்டிப்பாக இருக்குமென்று கேள்வி, விற்கும் பொருள் எதையும் நாங்கள் கொண்டு போக வில்லை. தடுக்கப்பட்ட பொருளும் மூவரிடமும் இல்லை. கொண்டு போன அந்நியச் செலாவணியும் இந்திய