பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

அது எவ்வளவு கொடியதாலுைம், அதைக் காப்பதற் காகப் போரிடுவது, சமுதாய இயல்பு ஒட்டங்களில் ஒன்று.

மத்திய ஆசியாவில், முகமூடி அணியும் பழக்கம் பல நூற்ருண்டுகளாக உயிரோடிருந்து வந்தது. முகமூடிக்கு உஸ்பெக் பெயர் 'பராஞ்சர். முந்திய காட்டுக் காலத்தில் திடீர் தாக்குதல் காலத்தில், பெண்களைப் பொருள் களாகக் கருதி, களவாடிக் கொண்டு, ஒடி விடும் அநாகரிக காலத்தில், சிறிய பாதுகாப்பாக, முகமூடி ஏற்பட்டதோ என்னவோ? அதனுல், பாதுகாப்பை விட கொடுமையே அதிகமான போது, பலர், நெஞ்சு குமுறினர். அவர்களில் ஒர் உஸ்பெக் பெண்மணி, துணிந்து, புரட்சி செய்தார ாம். முகமூடியை எடுத்தெறிந்து விட்டு, வெளியே வந்தாராம்"

ஆண்கள் ஆத்திரமடைந்தார்கள். அடுக்குமா இது என்று ஆர்ப்பளித்தார்கள். நல்லதொரு பாடங் கற்பிக்க வேண்டுமென்று முழங்கினர்கள், சாவுத்தண்டனேயே ஏற்ற தண்டனே என்று முடிவு செய்தார்கள். பழக்கத்தின் கோரப் பிடியிலிருந்து விடுபட முடியாத அப்பாவிகள் அப் பெண்ணைத் தீயிலிட்டுக் கொன்ருர்களாம். அது அந்தக் காலம்.

சோவியத் ஆட்சிக்கால கிலே வேறு. சோவியத் காலம், பெண்களுக்கு விடுதலையும் உரிமையும் வழங்கும் காலம். உஸ்பெக் மக்கள், சோவியத் ஆட்சியை, தங்கள் நிலப் பரப்பில், கில நிறுத்துவதற்காகப் போராடிக் கொண்டிருந்த போதே - தொடக்க நிலையிலேயே - முக்ரம் என்னும் பெயருடைய அம்மையார் தன் முகமூடியைக் கமுற்றி, எறிந்து விட்டு, ஒளிபடைத்த புதிய சமுதாயத்தை உருவாக்கும் வழியைக் காட்டினர். புரட்சி

இயக்கத்தைச் சேர்ந்த அந்த அம்மையாரை, பழமைக்