பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6

கொடுமை ஒன்றும் செய்ய இயலவில்லை. கால மாற்றம் கருத்து மாற்றத்தையும் கொண்டு வந்து விட்டது.

இன்று. உஸ்பெக் மக்கள் - ஆண்களாயினும் பெண் களாயினும் அணியும் உடை மேனுட்டுப் பாணியிலானது. பழைய உடை, எப்போதோ ஒரு வேளை, தனி நிகழ்ச்சி களுக்கு மட்டுமே. இக் காலத்தில் முகமூடியே அணிவது

. رنځ نهGE

'வேலு! கீழே இறங்கலாமா?' என்ற கேள்வி என் காதில் விழுந்தது. அதே கொடியில், மொழி பெயர்ப் பாளர், கீழே இறங்கி, காரின் கதவைத் திறந்து பிடித்துக் கொண்டிருந்தார்.

டாஷ்கண்டைப் பற்றி எண்ணத் தொடங்கி உஸ்பெக்கிஸ்தானின் நீண்ட வரலாற்றில், பழக்க வழக் கங்களில் சிந்தனையைப் பறி கொடுத்திருந்த நான், தன்னுணர்வு பெற்று, காரை விட்டு வெளியே வந்தேன்.

என் கண் முன்னே, பெரிய கட்டடம் தென்பட்டது. கனப் பொழுதில் அடையாளம் தெரிந்தது. இது டாஷ் கன்ட் ஒட்டலா? என்று வினவினேன். ஆம் என்ற பதில் கிடைத்தது. பத்தாண்டுகளுக்கு முன், நானும் மற்று மிரு இந்தியக் கல்வியாளர்களும், இதே ஒட்டலில் ஐந்து நாள் தங்கியிருந்தோம். அதை நினைவுபடுத்திக் கொண்டே அனைவரும் ஒட்டலுக்குள் நுழைந்தோம்.

அங்கே, பணியகத்திற்குச் சென்ருேம். ஆங்கிலத்தில் அதை 'செர்வீஸ் ப்யூரோ என்பார்கள்.

ஒட்டலில் தங்கப் போகும் விருந்தாளிகள், இப் பணியகத்திலே முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் 9760ئے( .ID ஒதுக்கும் வேலேயும் அதனுடையது. -