பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

ஜார் ஆட்சிக் காலம் வரை, துருக்கிஸ்தான் என்ற, பெயரில் வந்த இப்பகுதி வாழ் மக்களில், நாற்றக்கு இரண்டு பேர் கூட எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இலர். 18 பேரே எழுதப் படிக்கக் கற்றிருந்தார்கள். கல்வி காணுத துருக்கிஸ்தான், அறியாமையிலும் அல்லல் களிலும், ஆழ்ந்து கிடந்தது. வியப்பல்ல. எழுத்தறியாமை யின் ஆழத்திலே கிடந்த இப் பகுதி, சோவியத் ஆட்சிக் காலத்தில் கல்வியிலே வளரத் தொடங்கிற்று. எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது தெரியுமா? ஆயிரத்துக் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டே எல்லோரும் எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற நிலையை அடைந்து விட்டார்கள். எப்படி முடிந்தது? பத்தாண்டுகளுக்கு மேல் அரும்பாடு பட்டு அங்கிலேக்கு வந்தார்கள்.

உஸ்பெக்கிஸ்தானில் 1935 ஆம் ஆண்டில் 12,000 மாணவர்களே. 1980இல் அவ்வெண்ணிக்கை 3,50,000 ஆக உயர்ந்தது. இன்ருே? 25,00,000 சிறுவர் சிறுமியர் படிக்கின்ருர்கள். அவர்களுக்காக, 6800 ப ள் வளி க் கூடங்கள் உள்ளன.

உயர் கல்வி வாய்ப்புகள் உண்டா? உண்டு. நிறைய உண்டு. 105 தனி உயர்நிலைப் பள்ளிகள், 83 கல்லூரிகள், இரண்டு பல்கலைக் கழகங்கள் உயர் கல்வி கொடுக்கின்றன. 2,80,000 மாணவ மாணவியர் இவற்றில் கற்கிருர்கள். ஆராய்ச்சிக் கூடங்களுக்கும் குறைவில்லை. 130 இலட்சம் மக்கள் உள்ள இக் குடியரசில் மட்டும் 130 ஆராய்ச்சி, நிலையங்கள் உள்ளன. இவ ற் றி ல் பணிபுரிவோர் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? சரி. சொல்லி விடுகிறேன். 18,000 பேர் ஆராய்ச்சி நிலையங், களில் உழைப்பவர்கள். -

இவ்வளவு கல்வி முன்னேற்றத்தைக் கண்ட உஸ்பெக் மக்கள் கிறைவு கொள்வது நியாயம்; பெருமை கொள்ள உரிமையுண்டு. er