பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

பிரஞ்சுக் குடிமகனே, இத்தாலியக் குடிமகனே சராசரிப் பயன்படுத்தும் மின்சாரத்தைவிட அதிக 'மின்சாரத்தை உஸ்பெக் குடிமகன் பயன்படுத்துவதாகத்

தெரிந்து கொண்டோம்.

மின்சார வெளிச்சத்தில், டாஷ்கண்டைச் சுற்றிப் பார்க்க விரும்பிைேம். டாஷ்கண்ட் தோழர்கள், எங்கள் மூவரையும் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்கள்.

  • ஓராண்டில் இருநூற்று ஐம்பது நாட்கள் மப்பு மந்தாரமின்றி வெளிச்சம் போடும் அப் பகுதியில், அன்று மட்டும் ஏனே நாள் முழுவதும் தூறல். எங்கள்மேல் ஏன் கோபமென்று தெரியவில்லை.

துாறலையும் பொருட்படுத்தாது ஊர் சுற்றி வந்தோம். மின் விளக்குகள் சாலே தோறும் ஒளி வீசின. பல புதிய மாடிக் கட்டடங்களைக் கண்டோம். சென்ற கில அதிர்ச் சிக்குப் பிறகு கட்டப்பட்ட புதிய மாடிகளே அவை எேன்று தோழர்கள் அறிவித்தார்கள். அவற்றிலே பல

மாடிக் குடியிருப்புகள் என்று தெரிந்து கொண்டோம்.

தனித் தனி குடும்பத்திற்கு ஒவ்வொரு குடியிருப்பு ஒதுக்குவார்களா? பல குடும்பங்களும் சேர்ந்து ஒரே பெரிய கூடத்தில் வாழ வேண்டுமா? என்று தெரிந்து கொள்ள விரும்பினுேம்.

ஒவ்வொரு மாடிக் கட்டடமும் பல குடியிருப்புகளைக் கொண்டது. ஒவ்வொரு மாடியிலும் பல குடியிருப்புகள் தேனித் தனியே உள்ளன. ஒவ்வொரு குடியிருபபுக்கும் அதோடு சோந்தாற்போல் தனியாக குளியல் அறை, சமையல் அறை, உண்டு. உரையாடும் அறை, படுக்கை அறை உண்டு. சிலவற்றில் ஒரே படுக்கையறை இருக்கும். இன்னும் சிலவற்றில் இரண்டு படுக்கையறைகள் இருக்கும். மூன்று படுக்கையறைகள் கொண்ட குடி

بها مGrm