பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

யிருப்புகளும் உள்ளன. நான்கு படுக்கையறைதான் வரம்பு. குடியிருப்பு கோருவோரின் குடும்பத்தில் எத்தனை நபர்கள் என்று கணக்கெடுப்பார்கள். எண்ணிக்கையின் பேரில், ஒரறை குடியிருப்போ, பல அறை குடியிருப்போ ஒதுக்கிக் கொடுப்பார்களாம்.

ஒவ்வொரு குடியிருப்பிலும், தனிக் குழாய்களில் தண்ணிரும் வெங்ருேம் எந்நேரமும் வரும். மின் வசதி உண்டு. சமையலுக்கு ஆவியுண்டு. வாடகை எப்படியோ என்று விசாரித்தோம். சம்பளத்தில் மூன்று முதல் ஐந்து சதவிகிதம் என்று தெரிந்து கொண்டோம்.

சோவியத் நாட்டில் கட்டடங்களை விரைவாகக் கட்டி முடிப்பதாகக் கேள்விப் பட்டோம். அது எப்படி முடிகிறது?

நூற்றுக்கணக்கான - ஏன் ஆயிரக்கணக்கான - குடி யிருப்பு அறைகளும் ஒரே அகலமும் நீளமும் கொண்டவை. உயரமும் அதே அளவானவை. ஒரே அளவில் எல்லா வீடுகளும் இருப்பது வசதி. கட்டடச் சுவர்களுக்கு வேண்டிய சிமெண்ட் திம்மைகளை பதியிைரக் கணக்கில் ஒரே அளவில் அச்சில் வார்த்து தொழிற்சாலைகளில் செய்து விடுகிருர்கள். சாளரங்களையும் வாயில்களையும் கதவு களையும் ஆயிரக்கணக்கில் ஒரே அளவில் தொழிற்கூடங் களில் செய்து விடுகிருர்கள். இதல்ை காலச் சிக்கனம் ஏற்படுகிறது.

ஆங்காங்கே தொழிற்சாலைகளில் செய்த பொருள்களே கட்டட மனைக்குக் கொண்டு வந்து சேர்க்கிரு.ர்கள். அங்கே அடுக்கவேண்டியதை அடுக்குவதும், உரிய இடத்தில், பொருத்த வேண்டியதைப் பொருத்துவதும் நடைபெறுகிறது. எனவே மாடிகள் மளமளவென்று எழுகின்றன. வீண் காலதாமதமில்லாமல் கட்டட வேலை முடிந்து விடுகிறது.