பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

ஒன்று. 'கன்னியைப் பிடிக்கும் போட்டி. குதிரைச் சவாரியில் தேர்ந்த, பெண் ஒருத்தியைப் பிடிக்க, பல ஆண்கள் போட்டியிடுவார்கள். அப் பெண்ணுக்கு குதிரைகளில் வேகமாக ஓடக் கூடியதைக் கொடுப் பார்கள். போட்டியிடும் ஆண்களும் சிறந்த குதிரை களில் ஏறிக் கொண்டு, அவளைப் பிடிக்க மின்னல் வேகத்தில் பாய்வார்கள். பெண் முன்னே பறப்பாள். அவளே மற்றவர்கள் துரத்திப் பிடிக்க வேண்டும். குறிப் பிட்ட இடத்தை அவள் சேர்வதற்குள், அவளைப் பிடிக் தால், அவருக்குக் கிடைக்கும் பரிசு என்ன தெரியுமா? ஒரே ஒரு முத்தம். இதற்காகத் தலை தெறிக்க ஓடுவார்கள். குறித்த இடத்தைச் சேர்ந்ததும், திரும்பி ஓடி வருவாள். வரும்போது, கடைசியாக வரும் ஆளே, அவள் சாட்டை யால் ஓரடி அடிக்க உரிமை உண்டாம். ஐயோ பாவம் ! இது பழைய காலப் போட்டிப் பந்தயம்.

"மல்யுத்தம் பேர்போனது. இக்கால விளையாட்டுப் போட்டிகளும் அடிக்கடி கடக்கும். எங்கள் குடியரசில் ஐந்திற்கு ஒருவர் விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார். இது எப்போதும் இருந்து வரும் இயல்பு. இக்காலத்தில் விளையாட்டுகளுக்கு வேண்டிய வசதிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன .

'உஸ்பெக் குடியரசில், ஐம்பது விளையாட்டு அரங்குகள் உள்ளன. ச்ேசல் குளங்கள் அறுபத்தாறு: விளேயாட்டுத் திடல்கள் அறுநூறு. உள்ளிருந்து விளை யாடும் அரங்குகள் எண்ணுாறு." இதைப் பெருமை .யோடு சொன்னர்கள். o 'தொன்று தொட்டு, உ ட ற் பயிற்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் தனியார்வமுடைய நீங்கள். டாஷ்கண்ட் விளையாட்டரங்கத்தைக் கட்ட ஏன் இத்தனை காலம் கடத்தினர்கள்." -- !