பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

'பேச்சு வழக்கில் தெளிவு இல்லை. இரஷ்யா என்பது சோவியத் ஒன்றியத்திலுள்ள பதினேந்து குடியரசுகளில் ஒன்று. முந்தியது ஒர் பகுதி. ஒன்றியம் முழு நாடு. சோவியத் ஒன்றியம் என்பது இரஷ்யா வையும் வேறு பதின்ைகு குடியரசுகளையும் கொண்ட பெரு நாடு." - 蘭

"பதினேந்து குடியரசுகளின் பெயர்கள் என்ன?'

'அர்பினியா, அஜர்பைஜான், பைலோரஷ்யா, எஸ்தோனியா, ஜியார்ஜியா, கஜக்ஸ்தான், கிர்கிஜியா, லிதுவேனியா, மால்டேவியா, இரஷ்யா, டஜிகிஸ்தான், துருக்மேனியா, உக்ரைன், உஸ்பெக்கிஸ்தான் ஆகியவை, சோவியத் நாட்டில் அடங்கிய குடியரசுகளின் பெயர்கள்."

இப் பதினேந்து குடியரசுகளும் ஒரே அளவானதா? இல்லை. எது பெரியது?

இரஷ்யா பெரியது. நிலப் பரப்பிலும் பெரியது. சோவியத் நாட்டின் பரப்பில், முக்கால் பங்கு இரஷ்யா வைச் சேர்ந்தது. சோவியத் நாட்டு மக்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இரஷ்யக் குடியரசில் வாழ்கிருர்கள்

இரஷ்யக் குடியரசு மட்டுமே இந்தியாவைப்போல் ஐந்து பங்கு நிலமுடையது; அமெரிக்காவைப்போல இரண்டு பங்கு பெரியது. சோவியத் நாட்டை இந்தியா வோடு ஒப்பிட்டால், அது ஏழு பங்கு பெரியது. அமெரிக் காவைப்போல மூன்று பங்கு பெரியதாம். o

பதினந்து குடியரசுகளும் பரப்பிலோ, மக்கள். எண்ணிக்கையிலோ, ஒரே நிலையில் இல்லை. அவை பெரிதும் சிறிதுமாக உள்ளன.

அப்படியானல் பெரிய குடியரசின் ஆதிக்கம் வளர்ந்து விடாதா? அக் குடியரசு, அதாவது இரஷ்யா எனக்கிதி