பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வந்துவிடலாம். கதை :யல்ல; உண்மை. படியுங்கள். - - - o

பாதாள இரயில்கள், அடுத்தடுத்து, இரண்டு மூன்று கிமிடங்களுக்கு ஒர் முறை ஒடுகின்றன. பாதாள இரயிலில் ஒரிடத்தில் ஏறியவர், ஒவ்வொரு கிலேயம்ாக இறங்கி வேடிக்கைப் பார்த்து விட்டு, அடுத்த இரயில் ஏறி, அடுத்த நிலையத்தில் இறங்கி வேடிக்கைப் பார்க்கலாம். நேரமிருந்தால், இப்படியே எல்லா கிலேயத்தையும் பார்த்த -பிறகு, கோடி கிலேயத்தைவிட்டு வெளியே செல்லாமல், எதிர்பக்கம் செல்லும் இரயிலில் ஏறி உட்கார்ந்து ஒரே கட்டணத்தில் புறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வந்துவிடலாம்.

பாதாள இரயில் தவிர, பேருந்து வண்டிகள் கிறைய. அவற்றிலும் எங்கிருந்து எங்கே சென்ருலும் ஒரே கட்டணமே. அது ஐந்து கோபெக்ஸ். ஆனல் வழியில் இறங்கிவிட்டு, வேருெரு வண்டியேறும்போது, மறுபடியும் காசு கொடுத்து புதுப் பயணச் சீட்டு வாங்க வேண்டும். மின்சாரப் பேரூந்து வண்டிகளும் நிறைய ஒடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பயணஞ் செய் லதற்கும் ஒரே கட்டண முறையே. இதற்கும் ஐந்து கோபெக்ஸ். அடுத்தடுத்து பேரூந்து வண்டிகளும் மின்சாரப் பேருந்துகளும் பாதாள இரயில்களும் ஒடிலுைம் சில வேளைகளில் நெரிசல் அதிகம். காத்துக் கிடப்போர் வரிசை நீளம். இவை போக, வாடகைக் கார்களும் எண்ணற்றன. இப்படியும் அப்படியும் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் கட்டணமோ பயணஞ்: செய்யும் தாரத்தைப் பொறுத்தது. நான், முன்பு இரு முறை சோவியத் காட்டிற்குச் சென்றபோது, வாடகைக்

காரில் போகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அப்போது: o