பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

வழியில் பல முறை ஆங்காங்கே எங்கள் கார் இரண் டொரு மணித் துளிகள் கின்றது. பேச்சை நிறுத்தி சாலையைப் பார்ப்போம். சிகப்பு விளக்கு தென்படும். வழித்தடை வேருென்றமில்லையே' என்று கூறி.விட்டு மீண்டும் பேசுவோம். எங்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

கடைசியாக, கார், ஒர் பெரிய கட்டடத்தண்டை கின்றது. மொழி பெயர்ப்பாளர், சட்டென்று இறங்கி, எங்கள் பக்கத்துக் கதவைத் திறந்தார். நாங்கள் ஒவ் வொருவரும் வரிசையாக இறங்கிைேம். அப்போது பஞ்ச மழை பெய்து கொண்டிருந்தது. அதில் கனயாகப்பு எங்கள் மூவரையும், சட்டென்று கட்டடத்திற்குள் அனுப்பினாகள் சோவியத் நண்பர்கள்.