பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

எங்கள் அறைகளுக்கே, காப்பியும், கேக்கும் அனுப் யப்பட்டன. அச் சிற்றுண்டிக்குப் பிறகு, சற்று ஒய்வு எடுத்துக் கொள்ளும்படியும், மாலை ஆறு மணிக்கு வந்து. இராச்சாப்பாட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறி விட்டு, சோவியத் நண்பர்கள் விடைபெற்றுக் கொண் டார்கள். போகும் போது அஞ்சல் உறைகளையும் தலே களையும் கொடுத்து விட்டுச் சென்ருர்கள்.

பயண அலுப்புத் திர ஒரு மணி நேரம் உறங்கினேன். பின்னர் எழுந்து, வெங்கீரில் கலை முழுகினேன்.

மேசையின் மேல் இருந்த மாஸ்கோ செய்தி என்ற வார இதழைப் படித்து பொழுதைப் போக்கினேன்.

அங்காட்டில் பெரிய ஒட்டல்களில் ஒவ்வொரு அறை யிலும் வானெலிப் பெட்டி உண்டு. தொலைக் காட்சிக் கருவி உண்டு. எதையாவது ஒன்றை இயக்கி விட்டு, பொழுது போக்குவது உண்டு.

அறை தோறும் தொலைபேசியும் உண்டு.

o மாலை ஆறு மணிக்கு என் அறையிலிருந்த தொலே பேசி, மணியடித்தது. பேச்சுவாங்கியை எடுத்து காதில் வைத்தேன்.

'திரு. வேலு, இராச்சாப்பாட்டிற்கு மணியாயிற்று. காலதாமதம் செய்யாமல், உணவருந்தி விட்டால், ஏழு மணி, சர்க்கஸ்-க்கு அழைத்துப் போகிறேன். அதற்கான சிட்டுகளே வாங்கி வைத்திருக்கிறேன். போகலாமா? இரண்டாவது மாடியிலுள்ள உணவுச் சாலைக்கு நீங்களே இந்துவிடுகிறீர்களா? நானே, உங்கள் அறைக்கு வந்து அழைத்துப் போகவா? என்று வ்லாடிமீர் கேட்டார்.

நானே வந்துவிடுவதாகக் கூறினேன். அப்படியே அறையைப் பூட்டிக் கொண்டு குறிப்பிட்ட உணவுக்