பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

எங்களுக்கு பழக்கம் இல்லை. ஆயினும் மூவரும், மெல்ல அடி எடுத்து வைத்து, சருக்கி விழாமல் சர்க்கஸ் பண்ணிக் கொண்டு சர்க்களிற்குள் போய்ச் சேர்ந்தோம்.

சர்க்கஸ் என்றதும் கூடாரம் நம் நினைவிற்கு வரும். கூடாரத்திற்குள் உட்காருவோம். குளிரைத் தாங்கிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்போம். மேலே விண்மீன்கள் எங்களைக் கண்டு நகைக்குமென்று எதிர்ப் பார்த்தேன். கண்டதோ வேறு. கிலேயான பெரிய மாடிக் கட்டடத்தில் சர்க்கஸ் நடந்தது. வெளியே எலும்பையும் ஊடுருவும் குளிர். உள்ளே குளிரே தெரியவில்லை. அக் கட்டடம் சர்க்கஸ்-க்கு ஏற்ருற்போல், பனி வாடை நுழையாதபடி கட்டப்பட்டதாம். தரையும் சுவரும் பளபளப்பாக அழகாக இருந்தன. உட்காரும் இருக்கைகள், மெத்தென இருந்தன.

இருக்கைகள், வட்டவடிவில் வரிசைக்குமேல் வரிசை யாக அமைக்கப்பட்டுள்ளன. எங்கிருந்து பார்த்தாலும் சர்க்கஸ் விளையாட்டுகளே கன்ருகக் காணலாம். உயர இருக்கைகளில் இருப்போர், பைனுகுலர்களின் உதவியால் சர்ச்கஸ் வேடிக்கைகளைத் தெளிவாகப் பார்த்து மகிழ் கிருர்கள்.

வ்லாடிமீர் எங்களுக்கான நுழைவுச் சீட்டுகளே முன்னரே வாங்கி வைத்திருந்தார். எனவே, சீட்டு வரிசையில் காத்திராமல் மளமளவென்று நுழைந்தோம். உரிய இடத்தைக் கண்டுபிடித்துக் காட்டினர் வ்லாடிமீர் அவ்விடங்களில் அமர்ந்து காட்சிகளைக் கண்டு மகிழ்ந் தோம்.

யானை, குதிரை, புலி, கரடி, சிலவேளை சிங்கமும் நம் சர்க்கஸ்களில் காணலாம். மாஸ்கோ சர்க்களிலும் அவற்றை எதிர்ப்பார்த்தேன். குதிரைகள், விளையாட்டு