பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

97

  • இரண்டே நாளில் வந்து விடுகிறேன் " என்று கூறினார் நேரு, புறப்பட்டு விட்டார்.

வரும் வழியிலேயே அவரை வரவேற்றது சர்க்கார். அலகாபாத் ஜில்லா மாஜிஸ்திரேட் ஓர் உத்தரவு பிறப்பித்தார். உத்தரவு ஜவஹரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. என்ன உத்தரவு ?

1) அலகாபாத் எல்லையைத் தாண்டி எங்கும் போகக் கூடாது. பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது.

2) பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிடக் கூடாது. 3) துண்டுப் பிரசுரங்கள் வெளியிடலாகாது.

இது தான் உத்தரவு, அதைப் பெற்றுக்கொண்டார் ஜவஹா. ஊருககு வந்து சேர்ந்தார். சேர்ந்தவுடன் ஒரு கடிதம் எழுதினார் அலகாபாத் ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கு.

" நான் என்ன செய்ய வேண்டும் ? எங்கே போக வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் எனக்குத் தெரியும். அது குறித்து எனக்கு யாரும் உத்தரவு போட வேண்டியதில்லை. எவருடைய உத்தரவையும் ஏற்று நடப்பவன் நான் அல்ல. என் பெயரைக் கூட சரியாக எழுதத் தெரியவில்லை தங்களுக்கு. ஜவஹிரிலால் என்று எழுதியிருக்கிறீாகள். அது தவறு. ஜவஹர்லால் என்பது தான் சரி. இனி இந்த மாதிரி தவறு செய்யமாட்டீர்கள் என்று கருதுகிறேன். இங்கே எனது வேலைகளை கவனித்து விடடு சீக்கிரத்தில் நான் பம்பாய் செல்லயிருக்கிறேன் காந்தியை சந்திப்பதற்காக.” -

இந்த கடிதத்தை நண்பர்களிடம் படித்துக் காட்டினார் உறையிலிட்டார். ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பி விட்டார்.

12