பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

114

பீகாரிலே பூகம்பம். இயற்கையின் சீற்றம் ; உயிர்கள் நாசம். பொருள் நாசம், வீடுகள் நாசம். லட்சக் கணக்கான மக்கள் துன்புற்றார்கள்.

பீகாருக்கு ஒ டி ன ர் ஜ வ ஹ ர். நாசமடைந்த பகுதிகளுக்குச் சென்றார். துன்புற்ற மக்களைக் கண்டார், ஆறுதல் கூறினார். கண்ணிர் விட்டுக் கலங்கிய மக்களை கண்டார். கண்ணிர் துடைத்தார்.

பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டார். சர்க்காரின் செயலின்மை கண்டித்தார். பொது மக்களிடம் உதவி வேண்டினார்.

இனியும் சர்க்கார் சும்மா இருக்குமா ? செயல் ஆற்றத் தொடங்கியது.

'ரொம்பவும் அபாயகரமானவர் இவர். இவரை வெளியே விட்டிருப்பது நல்லது அல்ல. உடனே சிறைக்குள் தள்ள வேண்டும். கல்கத்தாவிலே இவர் செய்த பிரசங்கத்தை ஒரு காரணமாகக் கொண்டு வழக்குத் தொடருவது நல்லது."

இவ்வாறு யோசனை கூறியது டில்லி ,அரசாங்கம், ஐக்கிய மாகாண அரசாங்கத்திற்கு. அப்புறம் கேட்கவா வேண்டும் ? துள்ளி குதித்தது ஐக்கிய மாகாண அரசாங்கம். ஜவஹரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது.

பிப்ரவரி மாதம் 12ம் தேதி மாலை நேரம். ஜவஹரும் கமலாவும் தேநீர் அருந்தி விட்டு வாசல்புறத்தே நின்று கொண்டிருந்தார்கள், அப்பொழுது உள்ளே வந்தது போலிஸ் வண்டி.

வண்டியிலிருந்து இறங்கினார் இன்ஸ்பெக்டர்.