பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

121

ஒன்பது மாதங்களுக்கு முன்பு இதே டேராடூன் சிறையில் இருந்தார் ஜவஹர். ஆனால் இப்போது மாறுதல். என்ன மாறுதல் ?

தொலைவிலே உள்ள மலைகளும் மரங்களும் மனோரம்யமான காட்சி அளிக்கும். சிறையில் இருந்தபடியே அக்காட்சி கண்டு மனம் மகிழ்வார் ஜவஹர். அக்காட்சி இப்போது மறைக்கப்பட்டு விட்டது. பதினைந்து அடி உயரத்திற்கு சுவர் எழுப்பி விட்டார்கள் அதிகாரிகள். இயற்கைக் காட்சிகள் உண்டு இன்புற இயலாதபடி செய்து விட்டார்கள்.

மாட்டுத் தொழுவம் ஒன்று. அதை ஒட்டிய சிறு வராந்தா ஒன்று. அப்பால் ஒரு முற்றம். ஐம்பது அடி நீளம் இருக்கும்.

அந்த மாட்டுத் தொழுவத்திலே தான் ஜவஹர் சிறை வைக்கப்பட்டிருந்தார். இந்த இடத்தை விட்டு அப்பால் செல்ல அவருக்கு அனுமதி கிடையாது. இந்த முற்றத்திலே சில செடிகளை நட்டார் ஜவஹர். தண்ணிர் ஊற்றினார் ; வளர்த்தார். அந்தப் பசுமையில் இன்பம் கண்டார்.

1934-ம் ஆண்டு ஜூன் மாதம், சிறையிலே தமது சுய சரிதத்தை எழுதத் தொடங்கினார் நேரு.

ஆகஸ்டு மாதம் 11ந் தேதி இரவு சிறை அதிகாரி வந்தார்.

“புறப்படுங்கள், அலகாபாத்துக்கு” என்றார்.

போலீஸ் பாதுகாவலுடன் புறப்பட்டது வண்டி

அலகாபாத்துக்கு.

15