பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

124

வார்த்தை வாய் திறந்து சொன்னால் போதுமே ! உடனே அரசாங்கம் விடுலலை செய்து விடுமே ' என்றனர் சிலர்.

அது என்ன உறுதி மொழி ? அரசியலில் ஈடுபடுவது இல்லை என்ற உறுதி மொழி அளித்தால், ஜவஹரை விட்டு விடலாம் என்பது அரசாங்கத்தின் எண்ணம். அதை மறை முகமாக அறிவித்தது ஜவஹருக்கு.

ஜவஹர் உறுதிமொழி கொடுத்தாரா? இல்லை, இல்லை. 'ள்துவரினும் வருக; உறுதி மொழி கொடுப்பதில்லை” என்று தீர்மானித்தார். உறுதியாக நின்றார்.

ஒரு மாதம் சென்றது. அக்டோபர் மாதத்திலே ஒரு நாள். கமலாவைப் பார்த்து விட்டு வருவதற்காக ஜவஹரை அழைத்துச் சென்றார்கள் சிறை அதிகாரிகள்.

திரும்பி வரும் போது ஜவஹரின் காதருகே ஏதோ இரகசியமாகக் கூறினார் கமலா.

என்ன அது?

" உறுதி மொ ழி எதுவும் கொடுத்துவிடாதீர்கள்."

வீரத் தலைவனின் வீர மனைவி கூறிய வீர வாசகம் இதுவே.

எந்த சமயத்திலே?

உயிருக்கு மன்றாடும் நேரத்திலே - பிணியுடன்

போராடும் சமயத்திலே - வீராங்கனையின் வாயிலிருந்து வெளிப்பட்ட தைரியம் மிக்க சொற்கள்.

င္ငံႏိုင္ငံ