பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

139

இதே போல் தான் மத்திய ஆட்சியிலும் வைசிராய்தான் வலிமையுடையவர். மற்றவர் எல்லாம் கோபுரம் தாங்கும் பொம்மைகளே! ஒரு நாடு அடிமையாகவும் சுதந்திரமாகவும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது.

இதை தெளிவுபடுத்தினார் ஜவஹர். இதனால் 1935ஆம் ஆண்டு அரசியல் சட்டப்படி நடைபெறும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற க ரு த் ைத தெரிவித்தார். ஆனால் அவர்கள் பதவி ஏற்கக் கூடாது என்று வற்புறுத்தினார்,

தாம் சோஷலிஸ் கருத்துக்களே கொண்டவராயினும், கதர், மற்ற கிராமத் தொழில்களை எதிர்ப்பவரல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக அவை நிச்சயமாக ஆக்கம் பெறத்தக்க திட்டங்களும் எடுத்துரைத்தார்.

காங்கிரஸ் க மி ட் டி யி ல் நேருவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் மூவரே !. நரேந்திர தேவர், ஜெய்பிரகாஷ் நாராயண், அச்சுத்பட்டவர்த்தன் ஆகியவரே. சுபாஷ்சந்திர போஸ் அப்போது சிறையில் இருந்தது நேருவின் துர்பாக்கியமே. மற்றவர் எல்லோரும் மூத்த அரசியல் வாதிகள்.

"ஜவஹர் மெல்லமாக செயல்படுவது நல்லது என்று கூறினார்கள்.

ஜவஹரின் முற்போக்கு நோக்கங்களை மிகவும் எதிர்த்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.

அடுத்து பெய்ஸ்பூர் க | ங் கி ர ஸ் மகாநாட்டில் தலைவகிக்க நேருவுக்கு எதிராக போட்டியிட்டார் பட்டேல். ஆனால் காந்தியின் எண்ணப்படி தாம் போட்டியினின்று விலகினாலும், ஜவஹர் திட்டங்களை எதிர்ப்பதோடு நில்லாமல், அறிக்கையும் வெளியிட்டார்.