பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

142

சீனாவின் செயலை ஜவஹரை ஆதரித்தவர் ஆதரித்தனர். அத்துட்னா? ஒரு மருத்துவ குழாம் ஒன்றை சீனாவுக்கு அனுப்பியது காங்கிரஸ்.

இதே சமயம் சுபாஸ் போஸ் ஜப்பானுக்கு எதிராக சீனாவுக்கு உதவி செய்தது தவறு; மிக மிகத் தவறு என்று கருதினார். ' ஆசியாவிலுள்ள எல்லா நாடுகளும் இந்திய சுதந்திரத்திற்கு ஆதரவு தந்தே தீரும். சிற்சில ஆசிய நாடுகளில் வெவ்வேறு அரசியல் கொள்கை இருந்தாலும் அது அவர்கள் நல்லெண்ணத்தை மாற்றாது. எனவே காங்கிரஸின் செய்கை தவறானதே!' என்று தம் எண்ணத்தை வெளிப்படையாகவே கூறினார் சுபாஷ். இந்த கருத்தை நேரு ஏற்கவில்லை,

காங்கிரஸ் தலைவர் போட்டி வந்தது, காங்கிரஸின் மேலிடம் ஒருவரைத் நிறுத்தியது. அவரை எதிர்த்து, ஏன், காங்கிரஸின் மேலிடத்தையே எதிர்த்து தலைவர் போட்டிக்கு நின்றார் போஸ் , திரிபுராவில். பலன் என்ன? போஸ் அமோகமான வெற்றி பெற்றார். இது கண்டு காங்கிரஸ் மேலிடம் சும்மா இருக்குமா? 1939ஆம் ஆண்டு அவர் போக்கு பிடிக்காமல் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அவர் எந்த தேர்தலிலும் நிற்கக் கூடாது என்று தடையும் விதித்தது. இது ஒர் இழப்பு அல்லவா ?

நேருவுக்கு மற்றொரு பேரிழப்பும் ஏற்பட்டது. 1938ஆம் ஆண்டு அவர் அன்னை ஸ்ருபாராணி நோய்வாய்பட்டார். அவருக்கு மூன்றாம் முறையாக பாரிசுவ வாயு நோய் கண்டது. முதல் இரண்டு முறை அவருக்கு இந்த வாத நோய் பாதிப்பு ஏற்பட்டபோது அவரை காப்பாற்றியது அவர் தம் மகன்பால். கொண்ட அன்பே. இம்முறை அது வரம்புக்கோட்டை தாண்டிவிட்டது. ஓரிரவு இந்த நோயின்