பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

11

பிரதிநிதியாகச் சென்றார் ஜவஹர். ஆங்கில முறையில் கோட்டும் சூட்டும் அணிந்தவர்கள் தான் அங்கே குழுமியிருந்தார்கள். அப்போதைய காங்கிரஸ் ஜவஹரின் உள்ளத்தைக் கவரவில்லை. எனவே அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை.

பாரிஸ்டராகத் தொழில் புரிவதிலேயே கவனம் செலுத்தினார். எப்போதாவது ஒரு சமயம் தென் ஆப்பிரிக்க இந்தியர் பிரச்னை வரும். பிஜித் தீவுக்கு இந்தியர்களை கொண்டு செல்வது பற்றிய பிரச்னை வரும். அப்போது மாத்திரம் ஜவஹர் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபடுவார்.

ஹோம் ரூல் கிளர்ச்சி :

இந்நிலையில் லோகமான்ய திலகர் விடுதலை பெற்றார். அன்னிபெசன்ட் அம்மையார் ஹோம் ரூல் கிளர்ச்சி தொடங்கினார். அக்கிளர்ச்சிக்குத் திலகர் ஆதரவு அளித்தார். எனவே அதுவரை வகையறியாது தவித்துக் கொண்டிருந்த தீவிரவாதிகள் ஹோம் ருல் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்

ஹோம் ரூல் கிளர்ச்சி ஜவஹரின் உள்ளத்தைக் கவர்ந்தது. ஹோம் ருல் லீகில் சேர்ந்தார். இந்திய அரசியலிலே அன்னிபெசன்ட் முக்கிய இடம் பெறச் செய்தது ஹோம் ரூல் கிளர்ச்சி இந்திய அரசாங்கம் சும்மா இருக்குமா ? அன்னி பெசன்டைக் வீட்டு காவலில் வைத்தது.

1916 ம் ஆண்டு காங்கிரஸ் மகா சபை லட்சுமணபுரியில் கூடியது. அந்த மகாநாட்டிலே தான் முதன் முதலாக காந்திஜியைக் கண்டார் ஜவஹர்.