பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22

இந்த சம்பவம் ஜவஹரின் உள்ளத்திலே ஆழப் பதிந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் மீது கோபம் உண்டு பண்ணியது.

ஜவஹரின் தந்தை மோதிலால் நேரு இது பற்றி கேள்வியுற்றார்; கடும் கோபம் கொண்டார். கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

“அந்த உத்தரவு அமுலில் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி; என் குடும்பத்தாருக்கு உடம்பு சுகமில்லாது போளுல் கட்டாயம் முசோரிக்குப் போவோம்!” என்று அந்தக் கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார்.

பதினைந்து நாட்கள் சென்றன. ஜவஹரும் அவரது தந்தையாரும் மீண்டும் முசோரிக்கு புறப்பட்டனர். அப்போது சர்க்காரிடம் இருந்து ஒரு தந்தி வந்தது. போலீஸ் அதிகாரியின் உத்திரவு ரத்து செய்யப்பட்டு விட்டதாக அதிலே கூறப்பட்டு இருந்தது. .

தந்தையும் தனயனும் முசோரிக்குச் சென்றனர். அந்த ஹோட்டலில் என்ன கண்டனர்? எந்த ஆப்கனுடன் தொடர்பு கொள்ளக் கூடாதென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்தனரோ அதே ஆப்கன் ஒருவர் இந்திராவைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க கண்டனர்.

ஜவஹரிடம் போலீஸ் உறுதிமொழி கேட்டதும், அவர் அவ்வாறு உறுதியளிக்க மறுத்ததும், முசோரியை விட்டு போகுமாறு போலிஸ் அதிகாரி உத்தரவிட்டதும் பத்திரிகை களில் வெளி வந்தன. ஆப்கன் கோஷ்டியினரும் இதைப் படித்தனர். விளைவு?

அது முதல் தினமும் ஒரு கூடை பழம், ஒரு கூடை ੇ। இவ்விரண்டையும் நேரு குடும்பத்தினர்களுக்கு அனுப்பி வந்தனர்.

>k >k ×