பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24

கிழார்களின் பிரச்னையே; ஏழை உழவனின் பிரச்னையே அல்ல. ஏழை உழவனோ இந்த பெரு நிலக் கிழார்களின் பிடியில் அகப்பட்டுத் தத்தளித்தான்; திணறினான். அவனும் மனிதனே என்று கருதிய வர் எவருமிலர்.

இராமச்சந்திரர்

இந்த மாதிரியான சமயத்திலே விவாசாயிகளிடையே தொண்டு செய்து வந்தார் ஒருவர். அவரது பெயர் இராமச்சந்திரர். மகாராட்டிரத்தைச் சேர்ந்தவர். பிஜித் தீவு சென்று உழைத்து திரும்பியவர். துளசிதாசரின் ராமாயண சுலோகங்களை மனப்பாடம் செய்தவர். "ஜே சீதாராம்!” என்ற கோஷத்தின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டும் ஆற்றல் பெற்றவர். எப்போதாவது ஒரு முறை விவசாயிகள் சிலரை அழைத்துக் கொண்டு நகர்ப் புறங்களுக்கு வருவார் இவர். பிரபல அரசியல் தலைவர் களிடையே அவர் தம் துன்பங்களை எடுத்துக் கூறுவார். திரும்பிப் போய் விடுவார்.

1920ம் ஆண்டு. ஜூன் மாதம். ஒரு நாள். சுமார் இருநூறு விவசாயிகளை அழைத்துக் கொண்டு அலகாபாத் வந்து சேர்ந்தார் இராமச்சந்திரர். அலகாபாத்திலிருந்து ஐம்பது மைல் தொலைவில் உள்ள பிரதாய நகர் என்னும் பகுதியில் இருந்து அந்த விவசாயிகள் வந்திருந்தார்கள். ஊருக்கு வெளியே யமுனை ஆற்றின் கரையிலே அவர்கள் தங்கி இருந்தார்கள். அவர்களைக் கண்டு பேசுமாறு ஜவஹர்லால் நேருவை அழைத்தார் இராமச்சந்திரர்.

அப்போது என்ன நடந்திருந்தது? போலிஸ் அதிகாரி ஜவஹரை முசோசிலிருந்து விரட்டி, அவர் அலகாபாத்துக்கு வந்திருந்தார். வேதனை, அ வ மான ம், என்ற இரு உணர்ச்சிகள் அவரை வாட்டிய சமயம் இராமச்சந்திரரின் அழைப்பு சிறந்த மருந்தாக அமைந்தது. உடனே அவர் தம்