பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29

திரண்டிருக்கிறார்கள் ? சதித் திட்டங்களுக்கு காந்தி அனுமதிப்பாரா ? நிரபராதிகளான வெள்ளையர் சிலரைக் கொன்று குவிப்பதால் என்ன பயன் ? சுயராஜ்யம் வந்து விடுமா ?

இந்திய தேசீயவாதிகள் உயர்ந்த பண்புடன் நடந்துக் கொள்வார்கள் என்பதை அந்த வெள்ளையர் அறியவில்லை. பயம் அவர் தம் சிந்தையை மழுங்கச் செய்து விட்டது, பாவம் !

ஆனந்த பவனத்திலே மங்கல வாத்தியம் முழங்கின. அரசியல் மகாநாட்டிலே தேசீய கோஷங்கள் முழங்கின. ஆனால் அலகாபாத் வெள்ளையர் நெஞ்சோ திகிலில் துடித்துக்கொண்டே இருந்தது.

ஒத்துழையாமை இயக்கம் உச்ச கட்டத்தில் இருந்தபோது வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரம் நாடு முழுவதும் பரவிய பின்னரும் இப்படித் தான் பயந்தார்கள்.

பதினோராம் அத்தியாயம் வேல்ஸ் இளவரசர்

1921-ல் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு நவம்பர் மாதத்தில் விஜயம் செய்வதாக இருந்தது. இதையொட்டி பிரமாதமான வரவேற்பு அவருக்கு அளிக்க அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டது.

மகாத்மா என்ன செய்ய சொன்னார் ? புதியதொரு போராட்டம்- எத்தகையது? அகிம்சை போராட்டம் பற்றி பட்டி தொட்டிகளிலெல்லாம் பிரசாரம் செய்தார்- அறப்போர்! பகிஷ்கார போர் ! ஒத்துழையாமைப் போர் !