பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30

1920-ம் ஆண்டு தேர்தலை பகிஷ்காரம் செய்யவேண்டும்; அரசும் ஒத்துழைக்கக் கூடாதென்ற அவரது தாரக மந்திரம் முழு வெற்றி பெற்றது. இது மக்களிடையே காந்தியடிகளின் மதிப்பை அதிகரித்தது. ‘கிராமத்திற்கு போ ! என்ற ஜவஹரின் குரலும், வேல்ஸ் இளவரசர் வரும் போது 'பகிஷ்காரம் செய் !" என்ற காந்திஜியின் குரலும் ஒன்று சேர்ந்து ஒலித்தன.

1920-ம் ஆண்டு கடைசியில் நாகபுரியில் காங்கிரஸ் கூடியபோது, கிஸான் இயக்கமே உருக்கொண்டாற்போல் தோன்றியது. 1921-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 6-ந் தேதி சுல்தான்பூரில் விவசாயிகளை சந்திக்கக் கூடாதென்று இ. பி. கோ. 144 தடை விதிக்கப்பட்டது. இளஞ்சிங்கம் தடையை மீறியது. அரசாங்கம் செய்வதின்னதென தெரியாது, திகைத்தது.

ஆனால் இப்படி கண்ணை மூடிக்கொண்டு அரசாங்கம் இருந்துவிடுமா ? ஏற்ற சமயத்திற்காக பதுங்கும் நரியாக இருந்தது.

கதராடையே உடுத்தும் தேசீய வாதிகளைப் பிடிக்க ஒரு திட்டமிட்டது. இந்துஸ்தானியே பேசும் காங்கிரஸ்காரர்களை வலை வீசி பிடிக்க, இளவரசர் பகிஷ்காாம் உதவியது.

நவம்பர் பதினெழாம் தேதி; வேல்ஸ் இளவரசர் பம்பாய் வந்திறங்கினார். எங்கும் கிளர்ச்சி, கலகம்-தொடர்ந்து மூன்று நாட்களுக்ரு தடைபெற்றது.

தேச பந்து தாஸ் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மகாநாட்டுக்கு வந்தார் தலைமை தாங்க. ஆனால் விலங்கு கையில் பூட்டப்பட்டது. மற்ற மாநிலங்களிலும் இதே நிலை, யார், எவர், சம்பந்தபட்டவரா என்றே கவனிக்காது. பார்த்தவரை யெல்லாம் விலங்கிட்டது வெள்ளை அரசாங்கம்.