பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31

பிரதேச காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர்-55 பேரையும் ஒரு சமயத்தில் கைது செய்தது.

யார் யாரை கைது செய்யவேண்டுமென்ற ஜபிதாவில் முதலிலிருந்தது பெரிய நேருவின் பெயர் தான்.

டிசம்பர் 6 ஆனந்த பவனம் மாலை சென்ற போது நேரு என்ன அறிந்தார்? போலீஸ்காரர் தம் தந்தையாரைவும் தம்மையும் கைது செய்ய வந்ததை அறிந்தார்.

தந்தை சட்ட விரோத ஸ்தாபனமான காங்கிரஸில் இருந்தது தவறு; பெருங்குற்றம்.

மகன் கடையடைப்பு, ஹர்த்தால், துண்டு பிரசுரங்களை விநியோகித்தது- மன்னிக்க முடியாத குற்றம். அதாவது கைது செய்ய கற்பிக்கப்பட்ட குற்றங்கள்.

இதற்குக் கண் துடைப்பாக ஒரு போலி நீதி விசாரணை நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

இருவருக்கும் ஆறு மாத சிறைவாச தண்டனை, இலச்சுமணபுரியில், ஒரு கொட்டகையில் ஆரம்பித்தது நேருக்களின் முதல் சிறை வாசம்.

1921-22 ஆண்டுக்குள் ஜெயில்கள் நிரம்பி வழிந்தன. தாமாகவே சிறைக்குச் செல்ல 30,000 பேருக்கு மேல் முன்

வந்தனர்.

ஒவ்வொரு நாளும் சிறை கொட்டகையை சுத்தம் செய்தார் ஜவஹர். சர்க்காவில் நூல் நூற்பார். தன் தந்தை, தன் துணிகளை வெளுப்பதில் ஆனந்தங் கொண்டார். வகுப்புகளும் நடத்தினார்.