பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

33

சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இளைய நேரு மீது குற்றம் சுமத்தியது. 6 வாரங்களுக்குப் பின் மீண்டும் அதே இலட்சுமணபுரி சிறைக்கு அனுப்பப் பட்டார்.

அதே சமயம் பெரிய நேரு நைனி சிறைக்கு மாற்றப் பட்டார். இங்கே ஜவஹர் படிப்பதிலே ஆழ்ந்தார் இந்த இரண்டாவது முறை, தம் முப்பத்து மூன்றாவது பிறந்த நாளை சிறையிலே முதன் முறையாகக் கொண்டாடினார், இம்முறை அவருக்கு 21 மாத சிறை தண்டனை. -

1930 ம் ஆண்டு சனவரி முப்பத்தி ஒன்றாம் தேதி விடுதலை பெற்றார்.

பன்னிரண்டாம் அத்தியாயம்

ஆஹா ! என்ன அக்கறை !

1923-ம் ஆண்டு சனவரி 31, லட்சுமணபுரி சிறையில் இருந்து ஜவஹர் விடுதலை பெற்றபோது, தேசமெங்கும் சிறையிலே இருந்த தேசீயவாதிகள் பலர் அதே சமயத்தில் விடுதலை பெற்றனர்

சிறையிலிருந்து வெளிவந்த நேரு என்ன கண்டார்? முற்றும் மாறான காட்சி கண்டார். கிலாபத் கிளர்ச்சியின் போது இருந்த ஹீந்து-முஸ்லீம் ஒற்றுமை எங்கோ மறைந்து விட்டது. எங்கும் வகுப்புவாதம் தலை தூக்கி நின்றது. பொங்கி வந்த தேசீய வெள்ளம் எப்படியோ வடிந்துவிட்டது. தேசீய வசதிகளிடையே தோல்வி மனப்பான்மை காட்சி

அளித்தது.

A

بت،