பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

வரி குறைப்பு வேண்டி வருவதாக ஒரு சாக்குச் சொல்லிக் கொண்டு வருவார். ஆனால் அவருடைய எண்ணம் வேறு.

ஒரு நாள் அதை மறைமுகமாகவுந் தெரிவித்தார். எப்படி? பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தார். மிதவாதிகளைப் பற்றி விவாதித்தார். மிதவாதிகளைப் பற்றி அலட்சியமாகப் பேசினார். அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாக நெருங்கி வந்தார்.

“உங்களுடைய அந்தஸ்து என்ன ? படிப்பு என்ன ? திறமை என்ன? செல்வாக்கு என்ன? ஒழுக்கம் என்ன ? இலட்சியந்தான் என்ன? இப்படிப்பட்ட ஒருவர் இந்த மாகாணத்தின் கல்வி மந்திரியாக இருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்? எவ்வளவு சேவை செய்யலாம் ? கல்வி அல்லவா இன்றைய இந்தியாவின் மிக முக்கியமான தேவை !

'நீங்கள் மாத்திரம் சரி என்று தலையசைத்தால் போதும், மந்திரி பதவி நாளைக்கே உங்களைத் தேடி வரும். நீங்கள் செய்யும் காரியங்களில் அதிகாரிகள் குறிக்கிட மாட்டார்கள். நான் அவர்களிடம் ஏற்கெனவே இது பற்றி பேசினேன். அவர்கள் உறுதி கொடுத்திருக்கிறார்கள்.’’ என்று கூறினார்.

ஜவஹர்லால் நேரு என்ன செய்தார் ? அந்த வலையில் வீழ்ந்தாரா ? இல்லை, இல்லை ! பாரதியாரின் கவிதைக்கு ஓர் எடுத்துக்காட்டாக நின்றார்.

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ ? - என்றும்

ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார்கள் கள்ளில் அறிவை செலுத்துவாரோ?’’