பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38

ஜெய்டோ-நாபா சமஸ்தானத்தில் உள்ள ஓரிடம் இங்கேயிருந்தது ஒரு குருத்துவாரம். குருத்துவாரம் என்பது சீக்கியர் கோவில். ஜெய்டோ குருத்துவாரத்தில் அகாலியர் நுழையக்கூடாது; வழிபாடு செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார் நாபாவின் வெள்ளை அதிகாரி.

இந்த உத்தரவை மீறி சத்தியாக்கிரகம் செய்தனர் அகாலியர். நாபாவுக்கு வெளியேயிருந்து அகாலியர் ஜாதா வரும். போலீசார் அவர்களை நன்றாக உதைத்து நடுக் காட்டிலே கொண்டு போய் விடுவார்கள். இப்படி தொடர்ந்து நடந்துக் கொண்டே வந்தது.

சத்தியாக்கிரகம் செய்த அகாலியர்களோ மிக அமைதி ஆக இருந்தார்கள். சாத்வீகப் போர் செய்தார்கள். இவர் தம் கிளர்ச்சி தேச பக்தர்களின் கவனத்தைக் கவர்ந்தது.

இதை நேரிற் சென்று காண விரும்பினார் ஜவஹர்லால். எனவே நாபாவுக்குப் புறப்பட்டார். இவருடன் மற்றும் இருவர் சென்றனர். ஒருவர் ரீ கே. சந்தானம் மற்றொருவர் பூரீ கித்வானி. -

இம்மூவரும் ஜெய்டோ என்கிற இடத்தை அடைந்தனர். அந்த சமயத்திலே சீக்கியர் ஜாதா ஒன்று வந்துக் கொண்டு இருந்தது.

சமஸ்தான போலீஸ் அதிகாரி நேருவிடம் வந்தார். ஓர் உத்தரவைக் கொடுத்தார். என்ன உத்தரவு! நாபா சமஸ்தான எல்லைக்குள் நேரு நுழையக் கூடாது. அப்படி நுழைந்திருந்தால் உடனே வெளியே போய் விட வேண்டும்,' இதுதான் உத்தரவு. உத்தரவு பிறப்பித்தவர் நாபா நிர்வாக வெள்ளை அதிகாரி.