பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55

திருத்தச் சவால் எப்படி?

மிகவும் ஆவேசமாகப் பே சி ன ர் இளையவர். இளைஞர்கள் ஆரவாரம் செய்தார்கள்; குதுகலித்தார்கள்: கைதட்டினார்கள், உற்சாக மூட்டினார்கள்.

பார்த்தார் காந்தி. சபையில் பெரும் பாகம் ஜவஹருக்கு ஆதரவாக நிற்பதை அறிந்தார். எனவே சமரச வழி காண விரும்பினார். தமது தீர்மானத்தை வாபஸ் பெற்றார். மறுநாள் புதியதொரு தீர்மானம் கொண்டு வந்தார். சமரசத் தீர்மானம். பெரிய நேருவின் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, ஒரு வருஷத்துக்குள் டொமினியன் அந்தஸ்து அளிக்கா விட்டால் சட்டமறுப்பு போர்!’; என்பதே இந்த சமரச தீர்மானம்.

டிசம்பர் 28ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்திலே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் காந்தி.

பிரதிநிதிகளின் பார்வை எங்கு சென்றது? ஜவஹர் மீது. ஜவஹர் எங்கே? அங்கே இல்லை. சுபாஷ் போஸும் அங்கே இல்லை. எங்கே? எங்கே?

காந்தி எழுந்தார். “ ஜவஹர் இங்கே இல்லை. எனது தீர்மானம் அவருக்குப் பிடிக்கவில்லை, அவர் உத்தம புருஷர் , அனாவசியமாக பிளவு உண்டு பண்ண அவர் விரும்பவில்லை. எனவே வரவில்லை’ என்றார்.

'கோழை என்றனர் ஜவஹரை சிலர், காந்தியின் தீர்மானம் வெற்றி பெற்றது, ஏகமனதாக நிறைவேறியது. மோதிலாலின் மனம் குளிர்ந்தது.

காந்தியிடமும், தன் தந்தையிடமும் ஜவஹர் கொண்ட அன்பு, விட்டுக் கொடுக்கத் தூண்டியது.