பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

இருபத்தொன்றம் அத்தியாயம் கொந்தளிப்பு

4ல்லியிலே நடந்தது இது. தர்பார் நடந்து கொண்டு இருந்தது. திடீரென இரண்டு வெடிகுண்டுகள் வந்து விழுந்தன. எங்கே ? சபை நடுவே விழுந்தன ; வெடித்தன; கட்டிடத்தையே அதிரச் செய்தன.

குண்டுகள் எங்கிருந்து விழுந்தன ? பார்வையாளர் பகுதியில் இருந்து வீசியவர் யார் ? இளைஞர் இருவர் : வீர பாரதத்தின் இளம் செம்மல்கள் ; தேசிய திலகங்கள்; உயிரை திரணமாக மதித்த பேராளர்கள்.

ஒருவர் பகத்சிங், மற்றவர் எஸ். வி. கெ. டட்

அதே சமயத்திலே ஆட்சியாருக்கு மற்றொரு பேரிடி ! சைமன் கமிஷன் பகிஷ்காரத்தின்போது லாலா லஜபதிராயை குண்டாந் தடியால் தாக்கிய வெள்ளையன் பழி வாங்கப் பட்டான். -

நாட்டில் எங்கும் கொந்தளிப்பு ; உணர்ச்சி பெருக்கு, தேசீயத்தின் பெருவெள்ளம் சீற்றம் கொண்டு அழித்து விடுவேன் என்று பயமுறுத்தியது.

இந்த சமயத்திலே காங்கிரஸ் மகாநாட்டை எங்கே நடத்துவது இலாகூரில் என்று முடிவு செய்யப்பட்டது.

எனவே 1929ஆம் ஆண்டு காங்கிரஸ் மகாநாடு லாகூரிலே நடந்தது. மகாநாட்டு தலைவர் யார் ? மாகாண காங்கிரஸ் கமிட்டிகள் மொத்தம் 18. அவற்றுள் பத்து கமிட்டிகள் மகாத்மாவின் பெயரையே தேர்ந்தெடுத்தன.