பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68

முகத்திலே குத்துவதாக எண்ணிக்கொண்டு கைகளை மடக்கினார்; குத்து, குத்து என்று குத்தினார். எங்கே? சிறைக்கதவிலே.

அப்போது தான் தாம் சிறையில் இருப்பது அவருக்கு நினைவு வந்தது.

'இப்போது நாம் அலகாபாத்தில் இல்லையே!' என்று ஏங்கினார், வருந்தினார். மிகமிக வருந்தினார்.

அடுத்த நொடி! காந்தியின் உருவம் அவரது கண்முன் தோன்றியது. அவரது உபதேச மொழிகளை நினைத்தார். அகிமசா மூர்த்தியின் நினைப்பு அலைபாய்ந்த மனத்தை அமைதியுறச்செய்தது.

இருபத்திநான்காம் அத்தியாயம் சமாதானமா, இராசதந்திரமா?

ஜூன் மாதம் முப்பதாம் தேதி மோதிலால் நேரு கைது செய்யப்பட்டார், நைனி சிறைக்குக் கொண்டு வரப்பட்டார். பெரிய நேருவும் இளைய நேருவும் ஒருவரையொருவர் கண்டு மகிழ்ந்தனர். எட்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூலை மாதம் ஒன்பதாந் தேதி டில்லி சட்டசபை கூடியது. சட்டசபைத் தொடக்கத்திலே லார்டு இர்வின் பேசினார். அவரது பேச்சிலே சமரச தொனி காணப்பட்டது. அதை ஒரு குறிப்பாகக் கொண்டு லார்டு இர்வினைக் கண்டனர் இருவர். ஒருவர் ஸர் தேஜ் பகதூர் சப்ரு, மற்றொருவர் எம். ஆர். ஜயகர்.

இந்த இருவரும் எதற்காக இர்வினக் கண்டனர் ? க ா ங் கி ர சு ட ன் சமரசம் செய்து வைப்பதற்காக,