பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

இருபத்தி ஐந்தாம் அத்தியாயம்

வரி கொடா இயக்கம்

சிறையினின்று வெளிவந்த ஜஹவர் கண்டதென்ன ? நாட்டிலே எங்கும் சோர்வு நிலகக் கண்டார்; சத்தியா கிரகத்தின் வேக மிகவும் குறைந்ததை கண்டார்.

அன்று கூட்டங் கூட்டமாக உற்சாகத்துடன் சென்ற மக்கள் எங்கே ? இப்போது ஏன் சோர்வு கவ்வியது ? ஹர்த்தால், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் இவைகளில் மக்களுக்கு அலுப்பு ஏற்பட்டதேன் இயக்கத்தை இனி தொடர்ந்து நடத்த முடியுமா ? எப்படி ? எப்படி ?

அதற்கு வழி ஒன்றே. போர்க்களத்தை மாற்றினால்தான் சத்தியாகிரகத்திற்கு உயிரோட்டம் ஏற்படும். இதுவரை நகரங்களே சத்தியாகிரக மையங்களால் இருந்தன. இனி கிராமங்களே போர்க்களமாதல் வேண்டும். இதுவே ஜவஹரின் எண்ணம், இந்த எண்ணம் உருவாகும் வகையிலே ஈடுபட்டார்.

கிராமத்தில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது. கஷ்டம் ! கஷ்டம், மிகுந்த கஷ்டம்; பொருளாதார மந்தம். போதாதற்கு வரிவசூல் கெடுபிடி. தவித்தார்கள் மக்கள்.

'வரி கொடுக்காதே ”

என்று சொன்னால் போதும் பஞ்சுப் பொதியிலே தீ வைத்தது போல் பிடித்துக் கொள்ளும்,

இதை அறிந்தார் ஜவஹர். வரி கொடா இயக்கம் தொடங்க விரும்பினார்.

9