பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

38

பாராட்டத் தொடங்கினர். காங்கிரஸ் தலைவர்களைக் கண்டதும் புன்முறுவல் பூத்தனர்; பேசுவதற்கு ஆர்வத்துடன் ஓடி வந்தனர்.

லார்டு இர்வின் அண்ணலின் ஆறு நிபந்தனைகளை அப்படியே ஏற்றாரா ? இல்லை. ஏற்றவை சிலவே, தள்ளியவை மற்றவை.

உப்பு சத்தியாக்ாகத்துக்கு காரணமாக இருந்த உப்பு வரியை நீக்கினாசா ? இல்லை. அதற்கு பதில் கடற்கரை அருகே வசிக்கும் கிராம மக்களுக்கு உப்பு காய்ச்சும் உரிமை வழங்கினார், அதுவும் எப்படி ? சொந்த உபயோகத்துக்கு வேண்டிய உப்பை மட்டும் தயார் செய்து கொள்ளலாம்.

மறியல் செய்யலாம். எப்படி ? கடையிலிருந்து இருபது கஜ தூரம் விலகி நின்று மறியல் செய்யலாம். இதற்கும் உரிமை வழங்கினார் லார்டு இர்வின்,

  • பர்தோலி சத்தியாக்கிரகத்தின் போது ஜப்தி செய்யப்பட்ட நிலங்களை வேறு எவரும் வாங்காமல் இருந்தால் திருப்பித் தரல் இயலும்'.

' அரசியல் கைதிகள் விடுதலை பெறுவார்கள், ஆனால் பலாத்கார செயல் புரிந்தோர் விடுதலை பெறமாட்டார்!” என்றார் அடுத்த நிபந்தனைக்கு இர்வின்,

“அடக்கு முறை கைவிடப்படும். ஆனால் போலீசின் வரம்பு மீறிய செயல் குறித்து விசாரிக்க முடியாது!”

இதை காந்தி ஏற்றுக்கொள்ள மறுத்தார். போலீசின் வரம்பு மீறிய அட்டகாசங்களை விசாரிக்க வேண்டும் என மீண்டும் வற்புறுத்தினார் காந்தி,

இர்வினும் இதில் பிடிவாதமாக நின்றார். முடியாது’ என்றார் திட்டவட்டமாக,