பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 & செளந்தர்ய.

பொல்லாது சம்பவங்களுக்குக் கூடுவோம். இதற்கு மேல் என்ன வேணும்? சரி அது கிடக்கட்டும். நீங்கள் முதன் முதலில் அருவியைப் பார்த்ததை இன்னமும் எங்கள் மனசை விட்டே அகலாத காகஷியாகப் பண்ணிவிட்டீர்கள்:

குழப்பத்தில் என் புருவங்கள் உயர்ந்தன. “உங்கள் முகம் குங்குமமா செவந்து போச்சு கண்களில் அருவி பெருகுகிறது. ரெண்டு கைகளையும் அருவியை நோக்கி விரிச்சுண்டு “அம்பாளின் கூந்தல் எப்படிப் புரள்றது பாருங்கள்!” என்றீர்கள்.

மார்பில் இரண்டு இடி உடனேயே அடுத்து விலாப்புறம் ஒண்ணு. attack? அன்று வலிக்கவில்லை. ஆனால் நான் ஆடிப்போனேன். பரவசம். தீrதரின் குரல் எங்கோ து.ரத்-தி-ல்.

இப்பவே இப்படியே நான்மரணத்தைச் சந்தோஷத்துடன் வரவேற்கும் சமயங்களும் உளவோ?

என்னுள் கடல் பொங்கியது. பொங்குமாங்கடல், அவள் முகம் தெரியவில்லை. முகங்காட்டாள். காட்டு வதற்கில்லை. கண்டவர்க்கு உலகம் உறைந்துபோம். நம் பக்கத்துக்கு முதுகுகாட்டி அதுவும் அதன் மேல் அடவியாய் அடர்ந்த கூந்தலில் மறைந்துபோய் (அருவி யெனும் கூந்தல், கூந்தலெனும் அருவி) கவலை, வெட்கம், லஜ்ஜை எதுவுமில்லாது நிஷ்களங்கத்தின் ஆனந்தத்தில் புவனத்தின் ஆதிமகள் திளைத்துக் கொண்டிருக்கிறாள். கண்டவர் விண்டிலர்.

ஆகவே நினைவின் ஊடுருவல் இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன் ஒரு அமாவாசையின் அருவியைக்