பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ఉు செளந்தர்ய.

பக்தி என்பதே என்ன? பலமுறைகள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் எனக்கு அலுக்கவே இல்லை. பக்தி அது கண்டுவிட்ட பொருளோ, இடமோ, ஆளோ, அதன்மேல் அளவற்ற விசுவாசம், அதைப்பற்றி இன்னும் அறிய ஆவல். ஏதோ புரியாத ஒரு சிறு பயம் இவை எல்லாம் எனக்கு மாசு மேல் இருந்தது- இருக்கிறது. மாசுதான் இப்போது இல்லை. மாசு என் ரத்தத்துடன் கலந்து விட்டார். என் கதைகளைப் படித்துவிட்டு அதுகாரணமாக முதன் முதலாக நாங்கள் சந்தித்தோம். எங்கள் உறவு அப்போது ஒட்டிக் கொண்டதுதான். அவர் மறையும் வரை ஏன் அதற்கு அப்பாலும் இருக்கிறது. ஆனால் அவர் இறந்தபோது அவர் பக்கத்தில் நான் இல்லை. எனக்குத் தெரியாது. அவர் கடைசியாக அனுப்பிய கடிதம் என்னைச் சேரவில்லை. நான் சமையலறையில் வேலையாயிருக்கையில் கண்ணன் என் பின்னால் தோன்றி என் தோளைத் தொட்டு “மாக” என்றான்- தயங்கி.

எனக்கு உடனேயே புரிந்துவிட்டது. ஏன்? எப்படி? அவர் வீட்டுக்குப் போனபோது பின்னால் எனக்குத் தெரிந்தது. வாயில் கேன்சராம். கேலப்பிங் கான்ஸர். வெற்றிலையின்றி வெறும் புகையிலை போடுவார். ஆனால் இப்படி உடனேயே அழுத்தும்படி போட்டதாக எனக்குத் தெரிவில்லை. எப்படி இருந்தால் என்ன? அவருக்கு வேளை வந்துவிட்டது. ஆனால் அவருக்கு அழிவில்லை. மாசு மூர்த்தி சிறியது. ஆனால் செயல் பெரியது. கீர்த்திக்கு ஆசைப் படவில்லை. அதில் அக்கறையே இல்லை.

பேச்சு வாக்கில் சொன்னார் “பதினாலு பேருக்கு இடையில் பிறந்தவன். ஆனால் அவர் தாய்க்கு எஞ்சி யிருந்தவர் இவர் ஒருவர்தான். இப்போது அதுவுமில்லை. அவர் தாயை நான் பார்த்தேன். பேசவில்லை. இது துக்கம்