பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 తః செளந்தர்ய.

யோசிக்கையில் செளந்தர்ய உபாசனை என்று தனிப் படிப்போ, விதிகளோ, சிகிச்சையோ இல்லை. அப்போது அவனவன் தன்மைக்கு ஏற்ப தோன்றியது தோன்றியபடி) எதிர்பாராத சமயத்தில் உடலுக்கும் மனதிற்கும் தேன் இனிக்குதடா. இது காதலாய் இருக்க வேண்டுமா. திடீரென்று விழித்திரையிலிருந்து ஒரு தோல் உரிகிறது. எங்கு பார்த்தாலும் ஒரு துலக்கம் பளிச். அதன் அடுத்த கட்டத்திற்குப் போகும்வரை இந்தப் புது விழிப்பு இருக்கும். இன்னொன்று ஒப்புக்கொள்ள வேண்டும். செளந்தர்யத்தின் ஆழ்மன ஆராய்ச்சிக்கு, வயதிற்குப் பெரும் பங்கு உண்டு. தனி உற்சாகம். அடுத்தடுத்து என்ன என்ற அவா, என்னை நான் வெளியிட்டுக்கொள்ள எனக்கு நேர்ந்த புது விடிவைப் புகழச் சொற்கள் கிடைப்பதற்கு உடல்பலமும், ஒத்தாசை செய்யும். ஆனால் இது அத்தனையும் இருந்து என்ன பயன்? என்று ஒரு விரக்தியும் சேரும். இதுவும் இன்றியமையாததே. எங்கேனும் எதிலேனும் அழகை வெளிப்பார்வையிலோ, உள்ளுணர்விலோ அதிலேயே எப்போதும் திளைத்துக் கொண்டிருப்பது என்பது சாத்தியமில்லை. நான் சிட்டுக் குருவி ஆகிவிட்டேன். வானமே என் ஆட்சி வானத்தில் குயில் பாடக்கண்டேன். குயிலும் மயிலாச்சுதடி இதைத் தான் பாரதி குறிக்கிறானோ?

அபூர்வமான சமயங்களில் விஸ்வப்ரேமையை அனுபவித்துப் பின் விடுதலையான மனத்தைத் தனி விசுவாசத்துள் எப்படி அடைப்பது? என்னவோ பிதற்று கிறேன். ஆனால் மனம் துள்ளுகிறது. ஒரு அதிசய மோனம் உள்ளே ரீங்கரிக்கிறது.

என் பிள்ளைப்பருவம் கிராமத்தில் கழிந்தது. அப்பா ஐந்தாம் வகுப்பு வாத்தியார். அந்தப் பள்ளியின் தலைமை