பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 * செளந்தர்ய.

என்றால் என்ன?) வேக வைத்துப் புதுப்பச்சரிசியில் தண்ணிப்பாலை ஊற்றி பெரிய மடக்கில் சாதத்தை வட்டித்து, சூரியனுக்குக் காட்டி பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று பலமுறை கூவுவார்கள். அம்மா அவள் சமைத்த சர்க்கரைப் பொங்கலை ஒரு பாத்திரத்தில் போட்டு அவர்களுக்கு அனுப்புவாள்.

இவ்வளவு விவரமாக என்னைச் சொல்லத் தூண்டியது யாதெனில் என்னுடைய பிள்ளைப்பருவம் ஒரு fairy land, இதில் முழு நிஜமுமில்லை. முழுப் பொய்யுமில்லை. இதில் கவிதை ஊடுருவுகிறது. நான் கொடுத்து வைத்தவன். என் பின் சந்ததிகளுக்குக் கிடைக்காது, உங்களுக்கும் கிடைக்காது.

மின்சாரமும் ரேடியோவும் புகுந்த பின்னர் உண்மையான கிராமம் போய்விட்டது. இன்றைய பண்ணை யார்களுக்கும் நான் வாழ்ந்த faily land இல்லை.

பத்து வருடங்கள் கழித்து நாங்கள் இருந்த இடத்தை யாரோ வாங்கிவிட்டதனால் நாங்கள் குடிபெயரும்படி ஆகிவிட்டது. எங்கள் மறுவாசம் நெசவாளர்கள் இடையே தொடங்கியது. இது குயவர்கள் வாழ்க்கைபோல் அவ்வளவு எளிமை இல்லையேயொழிய சிக்கலுக்குக் குறைச்சலே இல்லை. இன்னும் கூடுதலே. நூல் நிலையிலிருந்து தறி ஏறும்வரை அந்த நூல் பல பதங்களில் புகுந்து புறப்பட வேண்டியிருக்கிறது. அதுவரை அண்டைவீட்டார். எதிர் வீட்டார், தெருவோர் என்று யாவரும் அவசியமாய் பங்கு கொள்ளும் கூட்டுத்தொழில் தறி ஏறின. பிறகு நெசவாளி தறிக்குழியில் இறங்கினதும் குடும்பத் தொழிலாக மாறி விடுகிறது.