பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

骏

லா. ச. ராமாமிருதம் * 3

5

இந்தத் தடவை என் பிறந்தநாளும் தீபாவளியும் தேதிகள் விளையாடி விட்டன. என் மேல் பழி சுமத்தறமாதிரி எனக்கும் ஏதேனும் வந்துவிடும். Ch God! வயஸ்ானாலே வம்புதான்.

வாசலில் ஏதோ நிழல் தட்டுகிறது. இதோ வந்துட்டேன்- கண்ணன் எழுந்து போகிறான். கண்ணன் திரும்பாததால் சற்றுநேரம் பொறுத்து இவளும் எழுந்து போகிறாள். அடுத்து சேகரும் கழன்று கொள்கிறான்.

இவள் திரும்பிவந்து உட்காருகிறாள். அவள் முகத்தில் மாறுதல் காணமுடியாது அவ்வளவு அழுத்தம். மற்ற இருவரும் திரும்பவில்லை. வாசலிலேயே குமைகிறார்கள்.

“என்ன விஷயம்?

“தந்தி

"தந்தியா? என்ன?? யார்???”

o:

“எல்லாம் உங்கள் குருக்களச்சிதான்.” ஹைமாவதி சிலசமயம் பேசுவது அலகவியம் போல் தோன்றும். ஆனால் அது என்னவோ? “காலமாயிட்டாளாம்.”

“ஹா, விசாலமா? மாரைப் பிடித்துக்கொண்டேன். அவள் என் தோளைப் பிடித்து அழுத்தினாள்- "இதுக்குத் தான் சொன்னேன்.”

“என்ன சொன்னே?”

“சரி. என்னவோ சொன்னேன் போங்களேன்! வேளை வந்துடுத்து. போயிட்டாள். யார் என்ன செய்யமுடியும். அவளை எழுத்திலேயே நீங்கள் ஸ்திரம் பண்ணியாச்சே! அதைத்தவிர நீங்கள் என்ன செய்ய முடியும்?”