பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 * செளந்தர்ய.

வைத்தியின் பெற்றோர்கள் மிக்க நல்லவர்கள். வைத்தியின் அப்பா கூழாங்கல் கண்ணாடியை நூலில் கட்டிப் போட்டிருப்பார். அப்படியும் தலையை ஒரு பக்கமாய் சாய்த்து காக்கா பார்வைதான். வைத்தியின் தாயார் சுந்தராம்டாள் சற்று உசரமாக, பிரியமாக இருப்பார். அந்தக் குடும்பத்தில் பரம்பரையாகவே நீண்ட ஆயுசு.

நான் சின்னப்பையனாய் காலை வேளையில் குருக்கள் வீட்டில் பழையசாதம் சாப்பிட்டிருக்கிறேன். சாதம் அவ்வளவு சுகமில்லை. நைய்வேத்ய சோறு. விரைப்பு சோறு ஆனாலும் ப்ரிய சோறு. இதற்கு எங்கே போவேன்? வைத்திக்குப் பூணல் போட்டார்கள். பந்தியில் கரண்டியை உபயோகிக்காமல் கையாலேயே நெய்யை ஏந்தி இலைக்கு இலை ஒழுகவிட்டு ஒடுவார்கள். சாதத்தை இருகைகளால் அள்ளி வைப்பார்கள். "வாத்தியாரை கவனி,” “வாத்தியார் புள்ளையைக் கவனி” என்று அவ்வப்போது சாப்பாட்டுக் கூடத்தில் இறைச்சல், இதெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது. ஆனாலும் அந்தப் பிரியம், அந்த மரியாதை, அதுதான் இந்த வயதிலும் என்னைத் தாங்கிக்கொண்டிருக்கிறது.

அடுத்த வருஷமே வைத்திக்குக் கல்யாணம் நடந்தது. இருபது மைல்களுக்கு அப்பால் பெண் எடுத்தார்கள். எல்லா சம்பந்தங்களும் இருபது மைல் வட்டாரத்துக்குள் உறவினர் களுக்கிடையேதான். நாங்கள் கல்யாணத்திற்குப் போக முடியவில்லை. அடுத்த வாரம் காலையில் வைத்தி வீட்டிற்குப் போனேன். பாவாடையும் சட்டையுமாய் ஏழெட்டு வயதுப் பெண் திண்ணைத் துணைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்- முதல் விசனத்தில் தோய்ந்து திக்குத் தெரியாத காட்டில் வழிதப்பிப்போன குழந்தை மாதிரி. சுந்தராம்பாள் உள்ளிருந்து வந்தாள். ராமாமிருதம், வந்தையா? இவதான் உன் நண்பனின்