பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 • * செளந்தர்ய.

தைரியம் கிடையாது. எல்லாரையும், நல்லத்தனம் பண்ணிக் கொண்டு போகணும் என்று கொள்கை வைத்தியின் ஆக்ஷேபணைக்கு "நீங்க சும்மாயிருங்க” என்று வைத்திமேல் திரும்பி "இந்த சர்க்கரைப் பொங்கலைப் பண்ணறத்துக் குள்ளே எங்க பிராணன்போவுது இந்தமாதிரி பேரத்தை ஏத்துக்கவே கூடாது. இது இல்லாட்டி போவட்டும். ஆனால் அது போவாது. அடுத்த தடவையும் இதே மல்லுக்கட்டுதான். விசாலம் பெரியகோவில் என்று குறிப்பிட்டது காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில். அந்தக் கோயிலிலும் வைத்தி பரம்பரைக்கு பாத்யதை உண்டு. அரைக்கால் முறை என்டான். அப்படி என்றால் வருடத்தில் ஒரு நாள் ஏகாம்பர நாதர் சந்நிதியில் இரண்டு மணிநேர அர்ச்சனை செய்ய ஏற்றுக் கொள்வார்கள்.

“ப்யூ”

நீங்கள் 'ப்பூ பண்ணவேண்டாம். அந்த இரண்டுமணி நேரத்தில் கற்பூரத்தட்டில் இந்த வீட்டுப் பங்கிற்கு 200, 250 ரூக்கு குறையாது. வெள்ளிக்கிழமையாக வாய்த்து விட்டால் அதிர்ஷ்டம் கூரையைத் தூக்கும். எத்தனை யாத்ரிகர்கள். afts& IT@b goor;3.37395 (Floating Population) gort's slo. பக்திக்காரனைக் காட்டிலும் வடக்கிலிருந்து மார்வாரி, குஜராத்தி, ஆந்திரக்காரர்கள், இத்யாதிகள். வெள்ளைக் காரர்கள் சந்நிதிக்குள் வரமுடியாது. ஆனால் த்வஜ ஸ்த்தம்பம் அடியில் நின்றபடியே பஞ்சமுக தீபாராதனை பார்த்து நோட்டுக்கணக்கில் தகடிணையை வீசுவான்.

ஆகையால் அரைக்கால் முறையை அலட்ஷியம் செய்ய முடியாது. கந்தப்பார்கோயில் உண்டியில் கிடைக்கும் மாதச் சம்பளத்தைப் போல் மூன்று மடங்கு கிடைக்கிறதே. ஐயன் பேட்டையிலிருந்து பெரிய காஞ்சீபுரம் ஆறுமைல். ஆனால் மிதிப்பதற்கு வைத்தியிடம் சைக்கிள்தான் இருக்கிறதே. பூஜை