பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ** செளந்தர்ய.

உள்ளே

சுந்தரம்மா, வைத்தி, விசாலம்.

"எங்கே போறே?”

“உற்சவம் பார்க்க. இன்னிக்கு ராவனவாஹனமா மில்லே?" -

“சரி, ஏறு.”

அவள் வைத்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் பிரகாசமடைந்தது.

"எங்கேப்பரு இடம்: நான் நடந்தே போறேனே!”

வைத்தி கீழே குதித்தான். “ஏறு. இன்னும் இரண்டு பேர் வந்தால் கூட இடம் சரி பண்ணிக்கலாம். வில்வண்டி மாட்டுக்குக் கனமாயிருக்காது மாடு. மாட்டைப்பத்தி என்ன நினைச்சுண்டிருக்கே? முருகன் சந்தையிலிருந்து பிடிச்சுண்டு வந்திருக்கான். நான் முன்னாலே போய் ஏறிடுவேன். விசாலம் கொஞ்சம் தள்ளிக்கோ.”

அவள் ஒடுக்கிக் கொண்டாள்.

"சங்கோஜப்படாதீங்க. இன்னும் தாராளமா உக்காருங்க. எல்லாத்துக்கும் சமயம் போது உண்டு இல்லையா?” இப்போது அவள் பேசினாள்.

“வைத்தி. இன்னிக்கு உன் கோயில் பூஜை என்ன ஆச்சு?

“இந்த ஒருநாள் அப்பா பாத்துப்பா. நாளைக்காலை நான் போய்விடுவேன். ஒன்றிரண்டு பிள்ளையாரைப் பட்டினி போட வேண்டியதுதான். வேணும்னா நாளை சாயங்காலம் அவங்களை கவனிப்பேன். நீங்கள் தங்கி கல்யாணம் பார்த்துட்டு வாங்கோ.”